நள்ளிரவில் வெட்டிக் கொல்லப்பட்ட டெலிவரி பாய் ஊழியர்.. ஐயோ என்ன தவிக்க விட்டு போயிட்டீங்களே கதறும் மனைவி.!

நெல்லை மாவட்டம் வீரராகவபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் முகேஷ்(30). தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சுபிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.

nellai food delivery employee murder

நெல்லையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வீரராகவபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் முகேஷ்(30). தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சுபிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இவர் நேற்றிரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் முகேஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

இதையும் படிங்க;- சுவிட்ச் ஆப் செய்யாமல் தொங்கியபடி கிடந்த சார்ஜர் வயர்! வாயில் வைத்த 8 மாதக் குழந்தை துடிதுடித்து பலி..!

ரத்த வெள்ளத்தில் சரிந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெளியே சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது முகேஷின் இருசக்கர வாகனம் கிடந்த இடத்தில் உள்ள இருந்த முட்புதரில் அவர் சடலமாக கிடந்தார். இதை பார்த்ததும் மனைவி கதறி அழுதார். 

இதையும் படிங்க;-  அண்ணா ப்ளீஸ் என்ன விட்டுடுங்க! பலாத்காரத்தை எதிர்த்து போராடிய மாணவி! ஆத்திரத்தில் கிருமிநாசினி ஊற்றி கொலை.!

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அழகு முத்து(24), கிரி(20), முருகேஷ்(24) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios