சுவிட்ச் ஆப் செய்யாமல் தொங்கியபடி கிடந்த சார்ஜர் வயர்! வாயில் வைத்த 8 மாதக் குழந்தை துடிதுடித்து பலி..!
வழக்கம் போல சந்தோஷ் கல்குட்கர் தனது செல்போனை சார்ஜில் போட்டுள்ளார். அது சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்து விட்டு ஸ்விட்ச் ஆஃப் செய்யாமலே சாக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்தது.
சுவிட்ச் ஆப் செய்யப்படாமல் ப்ளக் பாயிண்டில் சொருகப்பட்டிருந்த சார்ஜரின் வயரை வாயில் வைத்து கடித்த 8 மாதக் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 8 மாதமே ஆன சானித்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வழக்கம் போல சந்தோஷ் கல்குட்கர் தனது செல்போனை சார்ஜில் போட்டுள்ளார். அது சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்து விட்டு ஸ்விட்ச் ஆஃப் செய்யாமலே சாக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்தது.
இதையும் படிங்க;- கைவிரித்த உச்சநீதிமன்றம்? பறிபோகிறது ஓ.பி.ரவீந்திரநாத்தின் எம்.பி. பதவி?
அப்போது சார்ஜர் வயரை பிடித்து சானித்யா விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வாயில் வைத்துள்ளது. அப்போது மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அங்கு வந்த தாய் சானித்யா மூச்சு பேச்சின்றி கிடந்த குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க;- Bengaluru : பெண்ணின் உச்சந்தலையில் வளர்ந்த கட்டி.. அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவர்கள்
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினர்.