யூடியூப் பார்த்து குழந்தை பெற்று கொலை செய்த 15 வயது சிறுமி!
சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட உறவால் தாயான 15 வயது சிறுமி யூடியூப் பார்த்து தான் பெற்றெடுத்த குழந்தையைக் கொன்றுவிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அம்பசாரி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு சமூக வலைத்தளம் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அவ்வப்போது நேரில் சந்தித்துக்கொண்டதில் சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். ஆனால், வீட்டுக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தால் கர்ப்பத்தை மறைத்து வந்த சிறுமி, அடிக்கடி தனியாக மருத்துவமனை சென்றுவந்தார்.
பின், வீட்டிலேயே சுயமாக பிரசவம் செய்துகொள்ள முடிவு செய்ததார். அதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்துவந்தார். மார்ச் 2ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டவுடன் வீட்டில் அறையின் கதவைப் பூட்டிக்கொண்டு யூடியூப் வீடியோவில் கூறியபடி ஒரு பெண் குழந்தையைப் பெற்றிருக்கிறார்.
ஓரினசேர்க்கைக்கு அழைத்த நண்பனை கொலை செய்த தொழிலாளி... கோவையில் நிகழ்ந்த பயங்கர சம்பவம்!
குழந்தையையும் மூடி மறைக்க நினைத்த சிறுமி பிறந்த குழுந்தையை உடனே கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார். பின் குழந்தையின் உடலை ஒரு பெட்டியில் அடைத்து வீட்டிலேயே ஒளித்து வைத்திருக்கிறார்.
சிறுமியின் தாய் தனது மகள் பலவீனமாக இருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்தபோது நடந்ததை எல்லாம் கூறி கதறி அழுதிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துவிட்டு, மகளை தகவல் தெரிவித்துவிட்டு சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தார்.
காவல்துறையினர் இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதன் அறிக்கை கிடைத்தவுடன் கொலை வழக்கு பதிவ செய்யப்படும் என்றும் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
Bihar Snake Kiss Video: மதுபோதையில் விஷப் பாம்பை கையில் பிடித்து முத்தமிட்ட இளைஞர் பலி