கட்டுமஸ்தான தேகமும், கொஞ்சம் அழகும் இருந்தால் போதும் எப்பேர்பட்ட பெண்களையும் ஈஸியாக மடக்கிவிடலாம் என்ற கீழ்த்தரமான எண்ணத்துடன் பெண்களை மோசடி செய்துள்ளார் காதல் ரோமியோ காசி. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இறைச்சி கடை வியாபாரி தங்கபாண்டியன். இவருடைய மகன் தான் காசி. MBA வரை படித்த இவருக்கு சரியான வேலை கிடைக்காததால், தன்னுடைய தந்தையின் கோழி கடையையே கவனித்து வந்துள்ளார்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியா பக்கங்களில் காசி 10க்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகளை தொடங்கியுள்ளார். அதில் தனது கட்டுமஸ்தான உடலை காட்டி விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்யும் பெண்களில் பார்க்க சற்று ஆடம்பரமாக இருப்பவர்களை தேர்வு செய்து அவர்களுடன் வழிய சென்று பழகியுள்ளார்.இப்படி 5 ஆண்டுகளாக பல பெண்களிடம் பழகி பண மோசடி செய்ததோடு மட்டுமல்லாது, ஆபாச படமெடுத்தும் மிரட்டியுள்ளார். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

பல இளம் பெண்களை காதலிப்பது போல் நடித்து வந்த காசி மீது நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, காசியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த பெண்ணிடம் நெருங்கி பழகிய காசி, அம்மாவிற்கு புற்று நோய் என்றும், மருந்து வாங்க பணம் வேண்டும் என்று கூறி ரூ.1 லட்சம் வரை வாங்கியுள்ளார். இப்படி பலமுறை பணம் வாங்கிய காசி, அவரை விட்டு விலகியுள்ளார். 

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அந்த பெண் காசியிடம் பணத்தை திருப்பி கேட்க... உன் அந்தரங்க வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த விசாரணையின் போது தான் காசி தனது அந்தரங்க லீலைகள் அடங்கிய லேப்டாப்பை ரகசியமாக மறைத்து வைத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, காசியின் கோழிப்பண்ணையில் இருந்து ரகசிய லேப்டாப்பை கைப்பற்றிய போலீசார், 3 கட்ட பாஸ்வேர்ட் கொண்ட அதனை ஓபன் செய்து ஆராய உள்ளனர். அந்த லேப்டாப் ஓபன் செய்யப்பட்டால் தான் பல ரகசிய பூதங்கள் வெளியே வரும் என்பதே நிதர்சனம்