லாஸ்பேட்டை காவல்நிலைய போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அஞ்சலை பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31,000 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் அதிகமான புகார்கள் கடந்த ஆண்டு வந்துள்ளதாகவும், கடந்த 2020-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 23,722 புகார்கள் வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு 30 சதவீதம் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2021ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி சாமிப்பிள்ளைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை(80). கணவர் இறந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அஞ்சலை வீட்டின் கதவு மூடியே இருந்தது. நேற்று இரவு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலிஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே லாஸ்பேட்டை காவல்நிலைய போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அஞ்சலை பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். விசாரணையில், மூதாட்டி காதில் அணிந்திருந்த தங்க கம்மல், வளையல் காணவில்லை.
வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு தெரிந்து கொண்டு அவரை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் தடயங்களை மறைக்க கொலை நடந்த வீட்டில் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொலையில் தொடர்புடையவர்கள் மூதாட்டிக்கு தெரிந்தவர்களாக அல்லது அந்த பகுதியை சேர்ந்தவர்களாக தான் இருக்க வேண்டும் என்று போலிசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையும் படிங்க : "வேற வழியில்லாம ஸ்விகி ஊழியரை அடித்தேன்!" சஸ்பெண்ட் போலீஸ்காரர் - ஆன்லைனில் கதறல் !!
இதையும் படிங்க : கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் கூட ஊழல்.. திமுக ஊழல் பெருச்சாளிகள் கூடாரம்.! அண்ணாமலை ஆவேசம் !
