பீர்பாட்டிலை பங்கு பிரிப்பதில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்  புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஐயன் குட்டிபாளையம் தர்மபுரி கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித் (24)  இவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.  அதே பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் திருமூர்த்தி ( 25) மற்றும் மதுபாலான் (25) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள், நேற்று முன்தினம் மாலை மூவரும் மது  அருந்துவற்காக மதுக்கூடத்திற்குச் சென்றனர். அங்கு நன்கு மது குடித்துவிட்டு மதுபாலன் தனியாக வீட்டுக்கு கிளம்பிச் சென்றார். பின்னர் அஜித்தும்,  திருமூர்த்தியும் ஒரே வாகனத்தில் வீடு திரும்பினார், வரும் வழியில் அவர்கள் வைத்திருந்த  இரண்டு பீர் பாட்டில்களை யார் எடுத்துக்கொள்வது என்பது குறித்து  இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற குருமூர்த்தி தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியால் அஜித்தின் வயிற்றில் சரமாரியாக குத்தினார், இதில் அஜித் அதேஇடத்தில்  ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனையடுத்தி கமுக்கமாக மதுபாலனுக்கு போன் செய்து வரவழைத்த திருமூர்த்தி. அஜித்தை  ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் கேட்டதற்கு சட்டைக்குள் சொருகி வைத்திருந்த  பீர் பாட்டில் உடைந்து வயிற்றில் குத்திக் கொண்டது என டாக்டர்களிடம் முதலில் இருவரும் மழுப்பினார்.

பிறகு பதற்றத்தில் மதுபாலன் நடந்த உண்மைகளை கூற, மருத்துவமனைக்கு போலீஸார் வந்து திருமூர்த்தியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர், அதில்  பீர் பாட்டிலை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் அஜித்தை கத்தியால் குத்தியதை திருமூர்த்தி ஒப்புக்கொண்டார். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி அஜித் மருத்துவமனையில் உயிரிழந்தார். பின்னர் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார். திருமூர்த்தியை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்