காரைக்குடி கொலை வழக்கு.. மருதுசேனை தலைவர் உள்ளிட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி வினித் (27) என்ற இளைஞர் கையெழுத்து போடச் சென்றபோது, அந்த வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஒட விரட்டி படுகொலை செய்தது.
காரைக்குடியில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மருதுசேனை தலைவர் ஆதிநாராயணன் உள்ளிட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி வினித் (27) என்ற இளைஞர் கையெழுத்து போடச் சென்றபோது, அந்த வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஒட விரட்டி படுகொலை செய்தது. இதில் வினித் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கொலை நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.. என்ன காரணம் தெரியுமா?
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன், தனசேகரன், மருதுசேனை அமைப்பின் முன்னாள் சிவகங்கை மாவட்டச் செயலாளர் விக்னேஷ்வரன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தனர். இதையடுத்து மருது சேனை தலைவர் ஆதிநாராயனன், தனுஷ், மருதுவிக்கி, சேது, சரவணன், தினேஷ், செல்வா, ஸ்ரீதர், நவீன், அஜித்குமார் ஆகிய 10 பேரும் சிறையில் உள்ளனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜின் பரிந்துரையின் படி ஆதிநாராயணன் உள்ளிட்ட 10 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- பக்கா பிளான் போட்டு மனைவி கொலை.. அழுது கதறி நாடகமாடிய கணவர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்..!
இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்த்து அமமுக வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.