Asianet News TamilAsianet News Tamil

ஒட்டு துணி இல்லாமல் வீடியோ காலில் அந்தரங்க உறுப்பை காட்டும் எம்.பி.. கருமம், தலையில் அடித்துக் கொள்ளும் மக்கள்

மக்களவை உறுப்பினர் இளம்பெண்ணுடன் வீடியோ காலில் பேசிவாறு அந்தப் பெண்ணுக்கு அந்தரங்க உறுப்பை காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது ஜெகன்மோகன் ரெட்டியின்  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.


 

Mp talking naked on video call.. Video going viral on social media
Author
Andhra Pradesh, First Published Aug 4, 2022, 6:30 PM IST

மக்களவை உறுப்பினர் இளம்பெண்ணுடன் வீடியோ காலில் பேசிவாறு அந்தப் பெண்ணுக்கு அந்தரங்க உறுப்பை காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது ஜெகன்மோகன் ரெட்டியின்  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துள்ள வரும் நிலையில், சில பெரிய மனிதர்கள் திரைக்கு மறையில் செய்யும் அட்டூழியங்கள், அந்தரங்கங்கள், ஆபாசங்கள், பாலியல் வன்முறைகள் ஏதோ ஒரு வழியில் கசிந்து மக்கள் மத்தியில் வந்து சேர்ந்து விடுகிறது. சில முக்கிய புள்ளிகள் செய்யும் தவறுகள் அட்டூழியர்கள் சமூக வலைதளத்தில் பரவும் போது அவர்களின் உண்மை முகம் புரிய வருகிறது.

Mp talking naked on video call.. Video going viral on social media

இந்த வரிசையில் ஆந்திர மாநிலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிர்வாணமாக வீடியோ காலில் பேசி தனது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முழு விவரம் பின்வருமாறு:- ஆந்திரப் பிரதேசம் இந்து புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கோரண்ட்ல மாதவ், இவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி ஆவார்.

இதையும் படியுங்கள்: தண்ணீர் பிடிக்க வந்த சிறுமியிடம் கண்ட இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. கம்பி எண்ணும் 70 வயது கிழவன்..!

இந்நிலையில் இவர்குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, அதில் இளம்பெண் ஒருவருடன் வீடியோ காலில் பேசும் மாதவ் அதில் அந்தப் பெண்ணுக்கு தனது அந்தரங்க உறுப்பை காண்பிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது காண்போரை முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரு பொறுப்புமிக்க அரசியல்கட்சியன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இப்படித்தான் ஒழுக்கக்கேடான நடந்து கொள்வதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டியா! வாலிபர் துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் படுகொலை!சினிமா பாணியில் நடந்த பயங்கரம்

இந்நிலையில் இன்று காலை இந்துபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த, கோரண்ட்லா மாதவ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் தனக்கும் தனது கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மார்பிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

 

Mp talking naked on video call.. Video going viral on social media

இந்த வீடியோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது தொடர்பான எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். எனக்கு எதிராக பரப்பப்பட்டு வரும் இந்த வீடியோ குறித்து எஸ்பியிடம் புகார் கொடுத்திருக்கிறேன். விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என அவர் கூறியுள்ளார்.அரசியல் புள்ளிகளின் இதுபோன்ற அந்தரங்க வீடியோக்கள் வெளியாவது இது முதல்முறை அல்ல, அதிலும் குறிப்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களன் ஆபாச வீடியோக்கள் பல வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவந்தி ஸ்ரீநிவாஸ், அம்பதி ராம்பாபு ஆகியோர் பெண்களிடம் ஆபாசமாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது, அந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது அக்காட்சியின் எம்பி ஆபாச வீடியோ வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios