சேலம் மாவட்டம் தம்பட்டி அருகே இருக்கிறது மூலசெங்கோடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் இளையராஜா(35). இவரது மனைவி திவ்யா(30). இந்த தம்பதியினருக்கு வார்னிகா (3), தான்சிகா (1 1/2 ) என இரண்டு பெண்குழந்தைகள் உள்ளன. திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து குழந்தைகளும் பிறந்து விட்ட நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நிகழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலையில் இளைஜராஜாவிற்கு சொந்தமாக இருக்கும் விவசாய நிலத்திற்கு குழந்தைகளுடன் திவ்யா வந்துள்ளார். அப்போது திடீரென்று குழந்தைகள் இருவரையும் கிணற்றில் தள்ளி விட்டு தானும் உள்ளே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீருக்குள் மூழ்கியதில் குழந்தைகள் இருவரும் மூச்சுத்திணறி மயங்கினர். அங்கிருந்தவர்கள் மூன்று பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

அதில் குழந்தை வார்னிகா உயிரிழந்திருந்தது தெரியவந்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த திவ்யாவையும், தான்சிகாவையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொன்று சென்ற நிலையில் குழந்தை தான்சிகாவும் பரிதாபமாக உயிரிழந்தார். திவ்யாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்... நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..!