புதுச்சேரி கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் ஜெயசேகரன். இவரது இரண்டாவது மனைவி ஜெயமேரி இவர்களுக்கு அமலோற்பவநாதன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் கணவருன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். கணவர் ஜெயசேகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற அமலோற்பவநாதன் அங்கிருந்த போலீசாரிடம் தனது தாயை கடந்த 5 ந் தேதி கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டதாகவும், வீட்டின் அறைக்குள் அவரது பிணத்தை வைத்து பூட்டி வைத்து இருப்பதாகவும் கூறினார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த  போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று அழுகிய நிலையிலிருந்த ஜெயமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அமலோற்பவநாதனிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு பல திடுகிகிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தனது அம்மா  ஜெயமேரிக்கு பல ஆண்களுடன் கள்ள தொடர்பு இருந்ததாகவும், அவர் வாலிபர்களுடன் வெளியே செல்வதும், அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதையடுத்து  அமலோற்பவநாதன் தனது  தாயாரை கண்டித்துள்ளார்.

இந்நிலையில்  கடந்த வாரம் ஒரு நாள் அதிகாலையில் ஜெயமேரி செல்போனில் வீடியோ காலிங் மூலம் நிர்வாணமாக  ஒரு இளைஞருடன்  பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த அமலோற்பவநாதனுக்கு கோபம் தலைக்கேறியது.

ஆத்திரமடைந்த அவர்  ஒரு நாற்காலியை எடுத்து  ஜெயமேரியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ஜெயமேரி மயங்கி விழுந்தார். உடனே அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜெயமேரியின் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார்.
 
பின்னர் அவரது உடலை அறையிலேயே வைத்து பூட்டி விட்டு, தானும் அதே வீட்டில் 7 நாட்களும் பிரேதத்துடன் தங்கியுள்ளார். இதையடுத்து  அமலோற்பவநாதன் போலீசில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.