நாட்டையே அதிர வைத்த பயங்கர கொலை வழக்குகள்..!
டெல்லியில் 35 துண்டுகளால் காதலியை காட்டுமிராண்டித்தனமாக கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் சர்ச்சைக்குரிய கிரிமினல் வழக்குகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
Most famous and controversial criminal cases in India: டெல்லியில் வசித்து வந்த மும்பையை சார்ந்த பூனாவல்ல – ஷ்ரதா ஆகியோர் வீட்டை விட்டு ஓடி வந்து, ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். பூனாவல்ல ஷ்ரதாவை கண்டம் துண்டமாக வெட்டி பிரிட்ஜில் வைத்துவிட்டு 18 நாட்கள் டெல்லி முழுவதும், இரவு 2 மணிக்கு சுற்றிதிரிந்து அவரின் உடல் பாகங்களை வீசியுள்ளார்.
ஷ்ரதாவின் தந்தை தனது மகளை காணவில்லை என கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு பூனாவல்லாவை கைது செய்தனர். விசாரணையில் ஷ்ரதா, இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என அடிக்கடி கேட்டு வந்ததால் இவர்களுக்கிடையே சண்டை எழுந்ததால், ஷ்ரதாவை கொன்று வீசியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிற கொடூரமான கொலை வழக்குகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
தந்தூரி கொலை
1995 ஆம் ஆண்டில், டெல்லி எம்.எல்.ஏ சுனில் சர்மா தனது மனைவி நைனா சஹானியை சுட்டுக் கொன்றார். பின்னர் உணவக உரிமையாளருடன் சேர்ந்து தந்தூரி ரொட்டி அடுப்பில் இறந்த உடலை எரித்தார்.
பெலாராணி தத்தா கொலை
1954 ஆம் ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த பெலாராணி தத்தா, அவரது காதலர் பீரனால் கொல்லப்பட்டார். மேலும் அவரது உடல் பாகங்கள் செய்தித்தாளில் சுற்றப்பட்டு கழிவறைக்கு அருகில் வீசப்பட்டன.
இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
ஆருஷியின் கொலை
2008-ம் ஆண்டு நொய்டாவில் 13 வயது சிறுமி ஆருஷி தல்வார் வீட்டில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். வீட்டுப் பணிப்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டு 2 நாட்களுக்குப் பிறகு அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
நிதாரி தொடர் கொலை
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மொனிந்தர்சிங் பாண்டர் என்ற தொழிலதிபர் 2005 - 2006ஆம் ஆண்டு பல குழந்தைகளை தனது பங்களாவுக்கு அழைத்து வந்து கொன்றார். அவர் இறந்த உடல்களுடன் உடலுறவு கொண்டார். பின்னர் அவற்றை துண்டுகளாக வெட்டி சாப்பிட்டார்.
நீரஜ் குரோவர் கொலை
2008 ஆம் ஆண்டு, நீரஜ் குரோவர் கன்னட நடிகை மரியா மோனியா, சூசைராஜின் காதலியான எமிலி மேத்யூவால் கொலை செய்யப்பட்டார். பின்னர் மோனிகாவுடன் சேர்ந்து இறந்த உடலை 300 துண்டுகளாக வெட்டி பையில் போட்டு காட்டுக்கு சென்று எரித்துள்ளார்.
சரத் கொலை
2017 ஆம் ஆண்டு, பெங்களூரில் வருமான வரித்துறை அதிகாரியின் மகன் 19 வயதான சரத், கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, ராமோஹல்லி ஏரியில் வீசப்பட்டார். விசாரணையில், பணத்துக்காக சரத்தை கொன்றது அவரது நண்பர் விஷால் என்பது தெரியவந்தது.
அமர்தீப் சதா
2007-ம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த அமர்தீப் சதா என்ற 8 வயது சிறுவன் தனது உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் சேர்ந்து மொத்தம் 3 குழந்தைகளைக் கொன்றான். அவன் தான் இந்தியாவின் இளவயது கொலை குற்றவாளி ஆவான்.
பிரியதர்ஷினி மேட்டூவின் கொலை
1996 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியான பிரியதர்ஷினி, அவரது கல்லூரி சீனியர் சந்தோஷ் குமார் சிங் என்பவரால் வாளில் கம்பியால் கட்டி கொல்லப்பட்டார். பின்னர், அடையாளம் தெரியாத வகையில் ஹெல்மெட்டால் முகத்தில் சரமாரியாக அடித்து கொல்லப்பட்டார்.
இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?