சின்ன பொண்ணுகூட பார்க்காமல் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி கல்லா கட்டிய கும்பலுக்கு சரியான ஆப்பு..!
கடந்த 2014-ம் ஆண்டு விபச்சார தடுப்பு வழக்கில் மீட்கப்பட்ட 14 வயது சிறுமியை, சென்னை பெரவள்ளூரில் உள்ள தனியார் காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். அப்போது, மற்றொரு விபச்சார வழக்கில் சிக்கிய பாத்திமா மூசா(28) என்ற பெண்ணும் அந்த காப்பகத்தில் தங்கியிருந்தார்.
தனியார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமியை கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்களுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு விபச்சார தடுப்பு வழக்கில் மீட்கப்பட்ட 14 வயது சிறுமியை, சென்னை பெரவள்ளூரில் உள்ள தனியார் காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். அப்போது, மற்றொரு விபச்சார வழக்கில் சிக்கிய பாத்திமா மூசா(28) என்ற பெண்ணும் அந்த காப்பகத்தில் தங்கியிருந்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமிக்கு நல்ல இடத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி காப்பகத்தில் இருந்து சிறுமியைக் கடத்திய மூசா தனது தாயார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். காணாமல் போனதாக சிறுமி மற்றும் பெண் மூசா குறித்து காப்பக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட்டு காட்சிகளை வெளியிட்ட புதுமாப்பிள்ளை! பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்த பெண்வீட்டார்.!
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஆள்கடத்தல் தடுப்புக் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை கடத்தி பாத்திமா மூசா மற்றும் அவரது தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, பாத்திமா மூசா(28), மாரியம்மாள் (49), கேளம்பாக்கம் சத்யா(40), தூத்துக்குடி தமிழ்செல்வி (35) மற்றும் புரோக்கர்கள் செம்மஞ்சேரி சதீஷ்குமார் (26), கோவளம் தனியார் விடுதி மேலாளர் செந்தில்குமார் (30), ரூம் பாய் மகேந்திரன் (32) உள்ளிட்ட 9 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க;- எவ்வளவு அறிவுரை சொல்லியும் அடங்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கதறிய கணவர்.. கைவிட மறுத்த மனைவி.!
இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சுமத்தப்பட்ட மாரியம்மாள், சத்யா, தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், பாத்திமா மூசாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், செந்தில்குமார், மகேந்திரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1.41 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.