கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பிளஸ் 1 படிக்கும் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பதுங்கி வாழ்ந்து வந்த தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் நெடுமங்காடு அருகே தெக்கும்கரை பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுஷா மகள் மீரா பிளஸ் 1 படித்து வந்தார். மஞ்சுஷாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து  விட்டார். இதையடுத்து மஞ்சுஷா தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இருப்பினும் மகள் மீரா பாட்டி வல்சலா வீட்டில் தான் அதிகம் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் மஞ்சுஷாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அனீஷ் அகமத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

மகள் மீரா பள்ளிக்கு சென்றுள்ள நேரத்தில் எந்த இடையூறும்  இல்லாமல் இவர்கள் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மீரா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது டாய் அவரது கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த மீரா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தனது தாயாரிடம் கேட்டுள்ளார் இதில் தாய் மற்றும் மகளுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பருவ வயதில் தனக்கு மகள் இருந்தும், கள்ளக்காதல் விவகாரம் மகளுக்கு தெரிந்தும் அதை விட மஞ்சுஷா தயாராக இல்லை. இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் மீராவை கொலை செய்ய தனது கள்ளக்காதலனுடன் திட்டம்போட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில  வாரங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த மீராவை, கள்ளக்காதலர்கள் பின் பக்கமாக இறுக்கிப்பிடித்துக்கொண்டு இரக்கமின்றி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் மீராவின்  உடலை அங்குள்ள பாழும் கிணற்றில் வீசியுள்ளனர். இதன் பின் மகள் மீரா அவரது காதலனுடன் ஓடி விட்டதாகவும், அவர்களை கண்டுபிடிக்க செல்வதாகவும் மஞ்சுஷா தனது  தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அவரது தாயும் அதை  நம்பியுள்ளார். ஆனால், மஞ்சுஷா சென்று 10 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வல்சலா நெடுமங்காடு போலீசில் புகார் செய்தார். 

இதற்கிடையே அனீஷும் மாயமானது தெரியவந்தது. இந்நிலையில்  கள்ளக்காதலர்கள் இருவரும் நாகர்கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். அதுபோல போலீசார்கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதால்  இருவரும் தங்கள் செல்போன் எண்களை மாற்றி உள்ளனர். இருப்பினும் செல்போன் ஐஎம்இஐ  எண்களை வைத்து  அவர்கள் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் போலீசார் நாகர்கோவில் சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கொண்டு சென்றனர்.

போலீஸ் விசாரணையில், மீரா வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகவும், தங்கள் பயந்துபோய் அவரது சடலத்தை கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமான போலீசார் துருவி துருவி விசாரித்ததில் கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று மீராவின் சடலத்தை கிணற்றில் இருந்து போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பிரேதப பரிசோதனையில் மீரா கழுத்தை நெரித்து  கொல்லப்பட்டது தெரியவந்தது.