கரூரில் ஆடு மேய்த்த சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 10ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்ட விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த மலை கோவிலூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு குடகனாற்றுப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவர் சிறுமியின் துப்பட்டாவை பயன்படுத்தி அவரது கைகளை கட்டிப்போட்டுவிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
போட்டிப்போட்டு சத்துமாத்திரையை உட்கொண்ட 4 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அரவக்குறிச்சி காவல் துறையினர் சிவசுப்பிரமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இன்ஸ்டா லைக்குக்காக புகைபிடித்துக்கொண்டு கத்தியுடன் ரீல்ஸ் போட்ட வீரமங்கைக்கு காவல்துறை வலைவீச்சு
இந்நிலையில், வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவசுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார்.