எத்தனை தடவை சொன்னாலும் கேட்காத காதலியை கடற்கரைக்குக் கூட்டிப்போய் தீர்த்துக் கட்டிய காதலன்
கள்ள உறவில் இருப்பதாக காதலி மீது சந்தேகப்பட்டு கழுத்தை நெறித்துக் கொன்ற நபர் விசாகப்பட்டினம் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.
ஆந்திராவில் காதலிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த நபர், ஆள் நடமாட்டம் இல்லாத பார்க்கில் வைத்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திராப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் எம்.ஆர்.பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை சாலையில் உள்ள கோகுல்பார்க் அருகே சனிக்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்த நபர் எம்.கோபால் கிருஷ்ணா தானே முன்வந்து கஜுவாகா நகரின் அருகே உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கொல்லப்பட்ட பெண் 27 வயதாகும் கொத்தவலசைச் சேர்ந்த கே. ஸ்ரவாணி என்றும் ஏற்கெனவே திருமணமான அவர் கணவரைப் பிரிந்து கோபாலுடன் வாழ்ந்து வந்தார் என்றும் போலீசார் கூறுகின்றனர். ஸ்ரவாணி விசாகப்பட்டினம் ஜகதம்பா சந்திப்பில் உள்ள ஒரு செருப்புக் கடையில் வேலை பார்த்து வந்ததாகவும் திருமணமான ஒரு வருடத்தில் சில தகராறுகளால் கணவரை பிரிந்துவிட்டதாவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஸ்பைக் காலில் அதிகாரிகள் போல் நடித்து பெண் டாக்டரிடம் ரூ.4.5 கோடி சுருட்டிய சைபர் கும்பல்
பின்னர் ஸ்ரவாணிக்கும் ஓவியரான கோபால் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஸ்ரவாணி வெங்கி என்ற வேறொரு நபருடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த கோபாலுக்கு ஸ்வரவாணி மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. பல முறை எச்சரித்தாலும், ஸ்ரவாணி வெங்கியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தாகக் கூறப்படுகிறது.
எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் ஸ்ரவாணி மெசேஜிலும் போனிலும் வெங்கியுடன் பேசியதால், கோபாலுக்கு ஆத்திரத்தில் இருந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து வந்திருக்கிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விசாகப்பட்டினம் கோகுல் பார்க் அருகே ஸ்ரவாணியும் கோபாலும் சந்தித்துள்ளனர்.
அப்போது ஸ்ரவாணி வெங்கியுடன் பழகுவது குறித்து கோபால் பேசி இருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது கோபம் அடைந்த கோபால் சனிக்கிழமை அதிகாலையில் அவரை பார்க்கிற்கு வரவழைத்து கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து விசாகப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.