தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் வீராசாமி (50). இவரது மனைவி பாப்பா(47). இந்த தம்பதியினருக்கு 10 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். வீராசாமி கேரளாவில் வேலைபார்த்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து செல்வது அவரது வழக்கம். கேரளாவில் அவர் வேலை பார்த்து வந்ததால் ஊரில் இருக்கும் மனைவியின் நடத்தை மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறும் செய்து வந்திருக்கிறார். இதனிடையே தற்போது அவர் ஊருக்கு வந்திருக்கும் நிலையில் கணவன் மனைவியிடையே மீண்டும் சண்டை நிகழ்ந்துள்ளது. பின் இருவரும் நேற்று இரவு தூங்க சென்றுவிட்டனர். தூங்காமல் விழித்திருந்த வீராசாமி அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தில் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் பலத்தகாயமடைந்த பாப்பா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

பின் வீட்டில் இருந்து வெளியேறிய வீராசாமி, நேராக காவல்நிலையம் சென்று சரணடைந்தார். மனைவியை கொலை செய்த தகவலை அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அதன்பிறகே பாப்பா கொலைசெய்யப்பட்ட தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்ததுள்ளது. பாப்பாவின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சரணடைந்த வீராசாமி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மனநலம் பாதித்த சிறுமியை சீரழித்த கிழவன்..! 4 மாதங்களாக சிறை வைத்து கர்ப்பமாக்கிய கொடூரம்..!