ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது பேத்தி ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயது சிறுமியான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டின் அருகே இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு பேத்தியை லட்சுமி அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து ரேவதி காணாமல் போகவே அதிர்ச்சியடைந்த லட்சுமி விசாகப்பட்டினத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் லட்சுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர்ராவ்(48) என்பவர் சிறுமியிடம் நைசாக பேசி சென்னை அழைத்து வந்துள்ளார். திருவொற்றியூரில் உள்ள ரெயில்வே குடியிருப்பில் இருக்கும் தனது வீட்டில் வைத்து சிறுமியை சங்கர்ராவ் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதில் சிறுமி தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இதனிடையே சங்கராவிடம் இருந்து தப்பிய சிறுமி சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியில் சுற்றி திரிந்தார். அவரை அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது தான் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார் சிறுமியின் பாட்டிக்கும் தகவல் அளித்தனர். பின் சிறுமி கூறியதனடிப்படையில் திருவொற்றியூரில் இருந்த சங்கர்ராவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் சங்கர்ராவ் ரயில்வே ஊழியர் எனதும் தற்போது பணியிடை நீக்கத்தில் இருந்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

'நீ வீட்டை விட்டு வந்துரு.. போயிறலாம்'..! ஆசை வார்த்தைகள் பேசி சிறுமியை மயக்கிய வாலிபர்..!