புதுச்சேரி அருகே இருக்கும் வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இவரது மகன் ரஞ்சித்(35). பிரான்சில் வேலை பார்த்து வந்த இவர் அங்கேயே தங்கியிருக்கிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து பெற்றோரை பார்த்து சென்றுள்ளார். 

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரஞ்சித் பிரான்சில் இருந்து புதுவை வந்துள்ளார். வீட்டில் தங்கியிருந்த அவருக்கும் அவரது தந்தை குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவும் இருவரிடையேயும் சண்டை நடந்துள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரஞ்சித்தை சரமாரியாக குத்தியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து பலியானார்.

ரஞ்சித்தின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் பலியான ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். ரஞ்சித்தை கொடூரமாக கொன்ற அவரது தந்தை குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

டெல்லியில் அதள பாதாளத்திற்கு சென்ற காங்கிரஸ்..! அதிகமுறை ஆட்சியமைத்த கட்சிக்கு நேரும் அவமானம்..!