நாகர்கோவில் மாவட்டம் தோவாளை அருகே இருக்கிறது புதூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் புஷ்பதாஸ்(56). இவரது மனைவி இரக்கம்(52). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகளுக்கு திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். இளையமகள் மதுரையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். புதூரில் இருக்கும் வீட்டில் கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில் மனைவியின் நடத்தை மீது புஷ்பதாஸிற்கு சந்தேகம் இருந்திருக்கிறது. இதனால் இருவரிடையேயும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. சம்பவத்தன்றும் வீட்டில் வைத்து கணவன் மனைவி இடையே சண்டை நடந்துள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த புஷ்பதாஸ், கம்பால் மனைவியை சரமாரியாக தாக்கி இருக்கிறார். மேலும் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து மனைவி மீது ஊற்றி உயிருடன் தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். அதிர்ச்சியடைந்த இரக்கம், தீயுடன் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

போலி பட்டியலின சான்றிதழில் அரசு அதிகாரியான மனைவி..! போட்டுக்கொடுத்து வேலைக்கு ஆப்பு வைத்த கணவர்..!

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிகிச்சையில் இருந்து இரக்கத்திடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் தனது நடத்தையில் சந்தேகமடைந்து கணவர் தீ வைத்து கொல்ல முயற்சித்ததாக அவர் கூறினார். இதையடுத்து புஷ்பதாசை காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதியபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இரக்கம் தற்போது மரணமடைந்துள்ளார். தீக்காயம் அதிகம் இருந்ததால் அவரை காப்பாற்ற இயலவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கடைசியாக இரக்கம் காவல்துறைக்கு அளித்த தகவல் மரணவாக்குமூலமாக கருதப்பட்டு புஷ்பதாஸ் மேலிருந்த கொலைமுயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. 

சிறுவன் உயிருக்கு எமனான தாயின் சேலை..! விளையாட்டு விபரீதமாகி போன பரிதாபம்..!