காதலியின் குழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கி கொன்ற கொடூரன்... பூனேவில் நிகழ்ந்த பயங்கரம்!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், காதலியின் குழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், காதலியின் குழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து குழந்தையை கொன்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக குழந்தையின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், கொலையாளி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கொலை செய்தவர், கெட் பகுதியைச் சேர்ந்த விக்ரம் ஷரத் கோலேகர் என அடையாளம் காணப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆபாச வார்த்தையால் திட்டி பெண்களை செருப்பால் அடித்த திமுக நிர்வாகியின் கணவர்! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் 6 ஆம் தேதி காலை, விக்ரம் ஷரத் கோலேகர், கேடில் உள்ள பெண்ணின் வீட்டிற்குச் சென்று, பெண்னின் குழந்தையை கூட்டி சென்று கொதிக்கும் நீரில் அமுக்கி கொன்றுள்ளார். அப்போது அந்த பெண் குழந்தையை குற்றவாளியின் பாதுகாப்பில் விட்டுவிட்டு வெளியில் சென்றதாக தெரிகிறது. அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண், குழந்தையின் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: போராட்டத்தில் ஈடுபட்டவரை பூட்ஸ் காலால் உதைத்து போலீஸ் அடாவடி! ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, 15 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கணவரை பிரிந்து வாழும் அந்த பெண்ணை, விக்ரம் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்த போது அந்த பெண் அதற்கு மறுத்ததால் மனமுடைந்த விக்ரம் இந்த கொலையை செய்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளதால், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.