Asianet News TamilAsianet News Tamil

Virudhunagar Murder: எங்க அம்மாவையே கிண்டல் பண்றியா? ஆத்திரத்தில் கேலி செய்தவனை காலி செய்த மகன்!

மகாலட்சுமியின் கணவர் புஷ்பராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்த நிலையில் கூலி வேலை பார்த்து தாய் மகாலட்சுமி தனது இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 

Man killed for mocking mother... Son arrested in virudhunagar tvk
Author
First Published Jun 7, 2024, 11:31 AM IST

ராஜபாளையம் அருகே பெற்ற தாயை கேலி செய்த நபரை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரம்  கிழவன் கோவில் பகுதியை சேர்ச்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஐயப்பன் (20), சிவகார்த்திகேயன் (10) இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மகாலட்சுமியின் கணவர் புஷ்பராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்த நிலையில் கூலி வேலை பார்த்து தாய் மகாலட்சுமி தனது இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 

இதையும் படிங்க: ஃபுல் மப்பில் வந்து பகலிலேயே உல்லாசத்திற்கு அழைத்த கணவர்! மறுத்த மனைவி! லவ் மேரேஜ் செய்த 22 நாட்களில் பயங்கரம்

மேலும் அதே பகுதியில் இவர்களது வீட்டின் அருகே நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட சதீஷ் (48) என்பவர் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அப்பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கணவனை இழந்து தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த தாய் மகாலட்சுமி மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது வீட்டில் அருகே வசித்து வந்த சதீஷ் மற்றும் அவரது சக நண்பர்களுடன் மகாலட்சுமியை தரை குறைவாக பேசி கேலி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த மகாலட்சுமி கடந்த இரு தினங்களாக மகன்களுடன் சரிவர பேசாமல் இருந்துள்ளார்.

தனது தாய் சோகமாக மனமுடைந்து இருப்பதை கண்ட மகாலட்சுமியின் மூத்த மகன் ஐயப்பன் தாயிடம் விசாரித்துள்ளார். தாய் மகாலட்சுமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சதீஷ் மற்றும் சக நண்பர்களுடன் கேலி செய்ததை மகனிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகன் ஐயப்பன் நேற்று இரவு வீட்டில் மது போதையில் இருந்த சதீஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் ஐயப்பன் வீட்டின் அருகே இருந்த உருட்டு கட்டை எடுத்து சதீஷை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரது சண்டையும் தடுத்து நிறுத்தி அவரவர் வீட்டிற்கு அனுப்பிய நிலையில் ஐயப்பன் தாக்கியதில் படுகாயமடைந்தத சதீஷ் அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக கிடந்துள்ளார்.

இதையும் படிங்க:  நான் கூப்பிடும் போதெல்லாம் உல்லாசத்திற்கு வரலைன்னா! வீடியோவை வெளியிட்டு விடுவேன்! பெண்ணை மிரட்டிய வாட்ச்மேன்!

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஐயப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios