- Home
- Gallery
- ஃபுல் மப்பில் வந்து பகலிலேயே உல்லாசத்திற்கு அழைத்த கணவர்! மறுத்த மனைவி! லவ் மேரேஜ் செய்த 22 நாட்களில் பயங்கரம்
ஃபுல் மப்பில் வந்து பகலிலேயே உல்லாசத்திற்கு அழைத்த கணவர்! மறுத்த மனைவி! லவ் மேரேஜ் செய்த 22 நாட்களில் பயங்கரம்
காதல் திருமணம் செய்த 22 நாட்களில் புதுப்பெண் இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் குடிகார கணவரை கைது செய்துள்ளனர்.

Love Marriage
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரணாமூரை சேர்ந்தவர் சுகுமார் (28). தொழிலாளி. இவருக்கும், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அத்தியூர் கிராமத்தில் உள்ள கலந்தமேடு பகுதியை சேர்ந்த திவ்யா (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றது. சுகுமாருக்கு திருமணத்திற்கு முன்பே மது குடிக்கும் பழக்கம் இருப்பது மனைவி திவ்யாவுக்கு தெரியவர அதிர்ச்சியடைந்தார்.
Gingee Crime News
சுமார் தினமும் மது குடித்து வீட்டிற்கு வந்ததால் கணவர் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையிலேயே ஃபுல் மப்பில் வீட்டிற்கு வந்து மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், சுகுமார் மதுபோதையில் இருந்ததால், திவ்யா அதற்கு மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணியை ஓயாமல் உல்லாசத்து அழைத்த கொழுந்தன்! விஷயம் தெரிந்த அண்ணன்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
Wife Murder
இதனால் ஆத்திரமடைந்த சுகுமார் அருகில் கிடந்த இரும்புக்கம்பியால் திவ்யாவின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ஆனால், கணவர் சுகுமார் அங்கிருந்து உடனே தப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Husband Arrest
இந்த கொலை சம்பவம் தொடர்பாக செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுமாரை கைது செய்தனர். உல்லாசத்திற்கு மறுத்த புதுப்பெண்ணை கணவனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நான் கூப்பிடும் போதெல்லாம் உல்லாசத்திற்கு வரலைன்னா! வீடியோவை வெளியிட்டு விடுவேன்! பெண்ணை மிரட்டிய வாட்ச்மேன்!