திருச்சியில் குடும்பத்தகராறில் தாக்குதல் கல்லூரி பெண் ஊழியர் கவலைக்கிடம் - கணவன் கைது

திருச்சியில் குடும்ப தகராறில் தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

man arrested who try to kill his wife in trichy

திருச்சி சுப்பிரமணியபுரம், கென்னடி தெருவைச் சேர்ந்தவர் முகமதுபாபு என்ற கண்ணன் (வயது 40). வீடுகளுக்கு வண்ணம் பூசும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சமீமாபேகம் (34). இவர் சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சமீமாபேகம் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். முகமதுபாபு அவ்வப்போது, அவர்கள் வீட்டிற்கு வந்து நமது விட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டுச் செல்வாராம்.

அதுபோல் நேற்று இரவு முகமதுபாபு வீட்டுக்கு வந்த போது கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முகமதுபாபு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி சமீபாபேகத்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் பெண் மர்ம மரணம்; அழுகிய நிலையில் உடல் மீட்பு

ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த சமீமா பேகத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; மிளகாய் பொடியை தூவிச் சென்ற மர்ம நபர்கள்

இதுபற்றி குறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து முகமதுபாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி இடையேயான மோதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios