கொள்ளிடம் ஆற்றில் பெண் மர்ம மரணம்; அழுகிய நிலையில் உடல் மீட்பு
கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றின் நடுவே இறந்து துர்நாற்றம் வீசிய நிலையில் பெண் சடலம் மீட்பு விக்கிரமங்கலம் காவல்துறையினர் விசாரணை.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் நடு பகுதியில் இறந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற காவல் துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து கொள்ளிடம் நடு பகுதியில் மணல் மேடாக உள்ள இடத்தில் இறந்து சுமார் 5 நாட்களுக்கு மேல் ஆன அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியபடி இருந்துள்ளது. இது குறித்து விக்கிரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த பெண் ஸ்ரீ புரந்தான் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகள் செல்வி (வயது 40) என்பது தெரியவந்தது.
வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; மிளகாய் பொடியை தூவிச் சென்ற மர்ம நபர்கள்
இவருக்கு பெற்றோர்கள் இல்லாததாலும், புத்தி சுவாதினம் இல்லாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரை கடந்து மணல் திட்டில் இறந்து கிடப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல் அதிகாரி மீது தாக்குதல்; ராணுவ வீரர் உள்பட 4 பேரை தரதரவென இழுத்துச்சென்ற காவலர்கள்
இவர் எப்படி இங்கு வந்தார்? யாரேனும் அழைத்து வந்தார்களா? தானாக இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்தார்களா? என்பது குறித்து விக்கிரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.