வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இருக்கும் காங்கேயநகரைச்  சேர்ந்தவர் ராமசந்திரன்(28). இவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வசிக்கும் பகுதிக்கு அருகே தேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். பிளஸ் 2 வரை படித்திருக்கும் இவர் அதன்பிறகு படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இதனிடையே சிறுமிக்கும் ராமச்சந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் தனக்கு திருமணமாகி இருப்பதை மறைத்து காதலிப்பதாக கூறி நெருங்கி பழகியிருக்கிறார் ராமசந்திரன். சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி அவரிடம் உல்லாசமும் அனுபவித்ததில் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சிறுமி ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் காலம் கடத்தி வந்திருக்கிறார்.

இந்தநிலையில் சிறுமி கர்ப்பமடைந்திருக்கும் செய்தி அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததுள்ளது. அதிர்ச்சியடைந்த அவர்கள் ராமச்சந்திரனை பற்றி விசாரித்ததில் அவர் திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது. ராமச்சந்திரனிடம் சென்று இதுகுறித்து கேட்டதில் ஆத்திரமடைந்த அவர் சிறுமியின் பெற்றோர்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் போக்சோவின் கீழ் ராமச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

மனநலம் பாதித்த சிறுமியை சீரழித்த கிழவன்..! 4 மாதங்களாக சிறை வைத்து கர்ப்பமாக்கிய கொடூரம்..!