Asianet News TamilAsianet News Tamil

செல்போன் சார்ஜரில் ஸ்பை கேமிரா .. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டல்.. அதிர்ச்சி சம்பவம்

செல்போன் சார்ஜரில் ஸ்பை கேமரா வைத்து, உடைமாற்றுவதை வீடியோவாக கசியமாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
 

Man arrested for threatening by recording private videos using Spy camera
Author
Bangalore, First Published Aug 22, 2022, 4:57 PM IST

கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மகேஷ் என்பவர், இரவுகளில் உணவு வியாபாரம் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, பெங்களூருவில் உள்ள தோழி ஒருவர் வீட்டிற்கு சென்ற இவர், அங்கு இரண்டு நாட்கள் தங்கி உள்ளார். 

அப்போது அந்த பெண்ணின் அறையில், ரகசியமாக தனது செல்போன் சார்ஜரில் ஸ்பை கேமிராவை பொருத்தி வைத்துள்ளார். இந்நிலையில் பெண் உடை மாற்றும் வீடியோ அந்த கேமிராவில் பதிவாகியுள்ளது. இரண்டு நாட்கள் கழித்து செல்போன் சார்ஜர் உட்பட தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு , அவர் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

மேலும் படிக்க:என்னுடைய காதலை பிரேக் அப் செஞ்சுட்டு.. நீ சந்தோஷமா பிறந்தநாள் கொண்டாடுறியா.. காதலியின் மண்டையை உடைத்த காதலன்

பின்னர் போலி சமூக வலைத்தளக் கணக்கு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் அந்த பெண்ணிடம், கேமிராவில் பதிவான அந்தரங்க வீடியோக்களை அனுப்பி மிரட்டியுள்ளார். மேலும் தான் யார் என்பதை அந்த பெண்ணிடம் சொல்லாமலே, தனது  விருப்பத்திற்கு அடிப்பணிய வேண்டும் என்றும் இல்லையென்றால் வீடியோக்கள் அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளான்.

Man arrested for threatening by recording private videos using Spy camera

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பெங்களூர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார், ஐபி அட்ரஸ் மூலம் இந்த பதிவுகளை அனுப்பிய நபர் யார் என்பதை கண்டுபிடித்தனர். அப்போது தான், தனது வீட்டில் தங்கிருந்த நண்பன் மகேஷ் இந்த கொடூர செயலை செய்துள்ளது தெரியவந்தது. 

மேலும் படிக்க:சினிமாவை மிஞ்சிய தரமான சம்பவம்.. சென்னை தொழிலதிபரை கடத்த பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பெண் டாக்டர்.!

இதனையடுத்து பெங்களூர் சைபர் கிரைம் போலீசார், மகேஷ் இருந்த இடத்திற்கு விரைந்து அவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து ஸ்பை கேமரா, இரண்டு மெமரி கார்டு, பென் டிரைவ், இரண்டு மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர். இவர் ஆன்லைன் மூலம் ரூ.1500 க்கு இந்த ஸ்பை கேமராவை வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்று வேறு எந்த பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios