என்னுடைய காதலை பிரேக் அப் செஞ்சுட்டு.. நீ சந்தோஷமா பிறந்தநாள் கொண்டாடுறியா.. காதலியின் மண்டையை உடைத்த காதலன்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கல்லுக் கூட்டத்தை சேர்ந்தவர் ஜாண் ஜெரோஷ். இவர் குளச்சல் அருகே ஒரு கிராமத்தில் பாஸ்டராக உள்ளார். இவரது மகள் ஜாபியா ஜாஸ்மின் (19). இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஜாபியா ஜாஸ்மின் தனது பிறந்த நாளை கொண்டாட 2 தோழிகள் மற்றும் ஆண் நண்பர் ஒருவரையும் வீட்டிற்கு அழைத்துள்ளார். 

boyfriend who broke his girlfriend skull in kanniyakumari

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் கட்டையால் தாக்கி மண்டையை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கல்லுக் கூட்டத்தை சேர்ந்தவர் ஜாண் ஜெரோஷ். இவர் குளச்சல் அருகே ஒரு கிராமத்தில் பாஸ்டராக உள்ளார். இவரது மகள் ஜாபியா ஜாஸ்மின் (19). இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஜாபியா ஜாஸ்மின் தனது பிறந்த நாளை கொண்டாட 2 தோழிகள் மற்றும் ஆண் நண்பர் ஒருவரையும் வீட்டிற்கு அழைத்துள்ளார். 

இதையும் படிங்க;- வெளிநாடு சென்ற கணவன்! சைடு கேப்பில் மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்க முயன்ற கொடூர தாய்! வெளியான பகீர் சம்பவம்

வீட்டு மொட்டை மாடியில் அவர்கள் பிறந்த நாள் விழா கொண்டாட தயாராகி கொண்டிருந்தனர். அப்போது ஜாபியா ஜாஸ்மினின் பள்ளி தோழன் அஜின் மரம் வழியாக மொட்டை மாடிக்கு சென்றார். ஜாபியா நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததை பார்த்த அஜின் ஆத்திரத்தில் தகாத வார்த்தைகளால்  திட்டிவிட்டு அவரை கடுமையாக கட்டையால் தாக்கியுள்ளார். 

இதில், படுகாயமடைந்த ஜாபியா ஜாஸ்மின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த  குளச்சல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  முதற்கட்ட விசாரணையில் மாணவி ஜாபியா ஜாஸ்மினும், அஜினும்  பள்ளி படிக்கும் போதிலிருந்தே கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜாபியா காதலை முறித்து கொண்டதும் தெரியவந்தது.

இதையும் படிங்க;-  டியூஷன் வந்த மாணவியுடன் கள்ளக்காதல்.. எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர் உல்லாசம்..!

கல்லூரி நண்பர்களுடன் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை பார்த்த ஆத்திரத்தில் அஜின் மாணவியை கட்டையால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.  இதனையடுத்து  தலைமறைவாக உள்ள அஜினை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios