காரில் கஞ்சா கடத்திய மதுரை தம்பதி… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
மதுரையில் காரில் கஞ்சா கடத்தி விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரையில் காரில் கஞ்சா கடத்தி விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு மற்றும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் போதை பொருட்களின் புழக்கம் இருந்துக்கொண்டு தான் வருகிறது. இதை அடுத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்பான வழக்குகளில் சிக்கும் நபரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை கண்ணனேந்தல் பகுதியில் வசிக்கக்கூடியவர் பரமேஸ்வரன்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த பெண்ணை டீசல் ஊற்றி எரித்த கொடூரன்; ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
இவரது மனைவி விஜயலெட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞராக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் காரில் கஞ்சா கடத்தியதாக கூறி கைது செய்யப்பட்டார். இதை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து தொடர்ச்சியாக கஞ்சாவை கடத்தி வந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் கஞ்சாவை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: நாகையில் காப்பக சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காப்பக நிறுவனர் கைது
இதனையடுத்து அவரிடம் இருந்து 5 சொகுசு கார்கள், 4 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம், 73 கிராம் தங்க நகைகள், 14 செல்போன்கள், லேப்டாப், 2 மோடம், கத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது குறித்து திருப்பாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்தல் ஈடுபட்ட பரமேஸ்வரனை கைது செய்ததோடு அவருடன் உதவியதாக இருந்ததாக அவரது மனைவி விஜயலெட்சுமி மீதும் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.