மதுவால் வந்த வினை! காதல் மனைவியின் கழுத்தை கரகரவென அறுத்து துடிதுடிக்க கொன்ற கணவன்.!
விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு ஜீவராஜ் நகர் 7-வது குறுக்கு தெரு சேர்ந்தவர் வடிவேல். கட்டிட தொழிலாளி. இவர் திவ்யா என்ற பெண்ணை 11 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விழுப்புரத்தில் மதுபோதைக்கு அடிமையான கணவன் காதல் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு ஜீவராஜ் நகர் 7-வது குறுக்கு தெரு சேர்ந்தவர் வடிவேல். கட்டிட தொழிலாளி. இவர் திவ்யா என்ற பெண்ணை 11 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மதுவுக்கு அடியான வடிவேல் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்க சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க;- திண்டுக்கல்லில் பயங்கரம்.. திமுக நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!
இந்நிலையில் நேற்று மாலை திவ்யா தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மதுவுக்கு அடிமையான கணவரால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று மாலை வடிவேல் தனது மாமனார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மனைவி திவ்யாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சீக்கிரமாக வேலை முடிச்சிடுங்க.. சென்னையில் இந்த பகுதியில் 5 மணிநேரம் மின்தடை..!
வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே மீண்டும் கணவன்- மனைவியிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த வடிவேல் காய்கறிகள் வெட்டும் கத்தியை எடுத்து வந்து திவ்யாவின் கழுத்து அறுத்து கொலை செய்து அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வடிவேலை தீவிரமாக தேடி வருகின்றனர்.