யார் வீட்டு பொண்ண யாரு காதலிக்கிறது.. இளைஞர் ஆணவக்கொலை? பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள அப்புவிளை சுவாமிதாஸ் நகரைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் முத்தையா(19).
நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அப்பகுதியில் எந்த அசாம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள அப்புவிளை சுவாமிதாஸ் நகரைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் முத்தையா(19). சங்கனன்குளம் பகுதியில் திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அப்போது, அதே கம்பெனியில் தன்னுடன் பணிபுரிந்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெண்ணின் வீட்டார் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருந்த போதிலும் இவர்களது காதல் தொடர்ந்தது.
இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நண்பனின் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. இறுதியில் நடந்த பயங்கரம்.!
இந்நிலையில், தனது நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற முத்தையா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. முத்தையாவை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் முத்தையா கழுத்து, முதுகு, வயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதையும் படிங்க;- இப்படி நடுரோட்டில் கேக் வெட்டினால் எப்படி போறது.. தட்டி கேட்ட ஆட்டோ ஓட்டுனர் படுகொலை.. நடந்தது என்ன?
இந்த சம்பவம் தொடர்பாக திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முத்தையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் விவகாரத்தால் இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.