Erode Crime News: ஒரு பெண்ணுக்கு இருவர் போட்டா போட்டி.. இறுதியில் கொலை முடிந்த பயங்கரம்.. நடந்தது என்ன?

பவானி காமராஜர் நகரை சேர்ந்த 19 வயது பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேது மணிகண்டன் காதலித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்து விட்டனர். 

love affair..youth murder in Erode tvk

காதல் தகராறில் முன்னாள் காதலனை இந்நாள் காதலன் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சேது மணிகண்டன் (23). பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது வெல்டிங் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பவானி, செங்காடு கோட்டை நகரை சேர்ந்தவர் குகநாதன் (26). குமாரபாளையத்தில் தள்ளுவண்டியில் பீசா, பர்கர் கடை வைத்துள்ளார். இவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இதையும் படிங்க: தலைநகரை அலறவிட காத்திருந்த கூலிப்படை கும்பல்! ஒரே நேரத்தில் 3 பேருக்கு ஸ்கெட்ச்! துப்பாக்கி முனையில் கைது!

இந்நிலையில், பவானி காமராஜர் நகரை சேர்ந்த 19 வயது பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேது மணிகண்டன் காதலித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்து விட்டனர். இதையடுத்து அதே பெண்ணை குகநாதன் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண்ணுக்கு கடந்த 14ம் தேதி பிறந்தநாள் என்பதால், அவர் கேக் வெட்டி கொண்டாடிய படங்களை தனது செல்போனில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக குகநாதன் வைத்திருந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த சேது மணிகண்டன் உன்னுடன் பேச வேண்டும் என கூறி பவானி அரசு மருத்துவமனை அருகே வருமாறு குகநாதனை செல்போனில் நள்ளிரவு அழைத்துள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். அப்போது இருவரும் அப்பெண்ணின் காதல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த குகநாதன், மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சேது மணிகண்டனை சரமாரியாக குத்தினார். 

இதையும் படிங்க:  சென்னையில் அதிர்ச்சி.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நெருக்கம்.. 15 வயது சிறுவனால் சிறுமி 5 மாதம் கர்ப்பம்!

இதில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சேது மணிகண்டனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது சேது மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சேது மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குகநாதன் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios