- Home
- Gallery
- சென்னையில் அதிர்ச்சி.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நெருக்கம்.. 15 வயது சிறுவனால் சிறுமி 5 மாதம் கர்ப்பம்!
சென்னையில் அதிர்ச்சி.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நெருக்கம்.. 15 வயது சிறுவனால் சிறுமி 5 மாதம் கர்ப்பம்!
சென்னையில் இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் 15 வயது சிறுவனால் சிறுமி 5 மாதம் கர்ப்பம் அடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவர் ஸ்டீல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் புளியந்தோப்பு வஉசி நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.
Child Girl Pregnant
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது அடிக்கடி வந்து சிறுமியுடன் நெருக்கமாக கடந்த 8 மாதங்களாக இருந்து வந்துள்ளார். மேலும் சிறுவனின் வீட்டில் ஆட்கள் இல்லாதபோது அழைத்து சென்று அங்கும் ஜாலியாக இருந்ததும் தெரியவந்தது. இதனால் அந்த சிறுமி 5 மாத கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்வீட்டில் போதை பொருள் கலந்து பள்ளி மாணவி பலாத்காரம்! சென்னை அதிர்ச்சி சம்பவம்.. சிக்கிய போதை கேங்!
Mother Shock
இதனிடையே புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சிலர், சிறுமியின் வீட்டுக்கு வந்து உனது மகள் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு என் மகன் தான் காரணம் என கூறிவருவதாக தெரிவித்து தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத தாய் அதிர்ச்சியடைந்து மகளை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தார்.
இதையும் படிங்க: என் நண்பனே இப்படி செஞ்சா கோவம் வருமா வராதா? அதனால் தான் அட்வகேட்டை ஓட ஒட விரட்டி கொன்றேன்.. குற்றவாளி பகீர்!
Police investigation
அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.