என் மகளை உன் பையன் எங்கே எங்கே கூட்டிட்டு போய் வெச்சிருக்கான் என் கேட்டு வாலிபரின் அம்மா செல்வியை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி பொன்னுசாமி- செல்வி மகன்  பெரியசாமிக்கும் அதே ஊரை சேர்ந்த நாட்டாமை  கொளஞ்சி என்பவரின் மகள் பவளிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த இவர்களின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததும், பவளிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து ஒரே அடியாக நிச்சயம் செய்து முடித்துள்ளனர். இந்த விஷயத்தை பவளி தனது  காதலனிடம் சொல்லி அழுதுள்ளார்.

இதனையடுத்து, பிரிய முடியாத இந்த இளம் காதல் ஜோடி, சில நாள்கள் முன்பு வீட்டை விட்டு எஸ்கேப்  ஆனது. இதனால் இரு குடும்பத்தினர் இடையே தொடர்ந்து பிரச்னை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை, பெரியசாமியின் தாய் செல்வி தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த பவளியின் அப்பா கொளஞ்சி உன் மகன் எங்கே இருக்கிறான்?என் மகளை இன்னும் வீட்டிற்கு அழைத்து வந்து விடவில்லை ஏன்? உன் மகன் என் மகளை எங்கே வெச்சிருக்கான்? சொல்லு சொல்லு என கேட்டு செல்வியை அசிங்க அசிங்கமாக திட்டி உள்ளார். அப்போது வாய் வார்த்தையில் கோபமான அந்த பெண்ணின் தந்தை அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து நீளமான கோலால் வெச்சு வெளுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை பார்த்த கிராம மக்கள் தடுக்க முடியாமல் திணறினர். அப்போது அங்கிருந்த சில இளைஞர்கள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செல்வியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், அந்த பெண்ணின் தந்தை தாக்கியதால் காயத்துடன் இருக்கும் செல்வி கொடுத்த புகாரின் பேரில் நாட்டாமை கொளஞ்சியை போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.