Asianet News TamilAsianet News Tamil

நதியில் நீராடியபடியே முத்தம் கொடுத்து உல்லாசம்.. புதுமண தம்பதியரை வெளுத்து கட்டிய கூட்டம்.. போலீஸ் FIR.

அயோத்தியில் அயோத்தியில் ராம்கி பைடியில் சரயூ நதியில் நீராடும்போது தனது மனைவிக்கு முத்தம் கொடுத்த 30 வயது வாலிபரை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Kissing and having Indecent while bathing in the river .. mob attack newlywed couple .. Police FIR.
Author
Ayodhya, First Published Jun 23, 2022, 11:58 PM IST

அயோத்தியில் அயோத்தியில் ராம்கி பைடி சரயூ நதியில் நீராடும்போது தனது மனைவிக்கு முத்தம் கொடுத்த 30 வயது வாலிபரை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தி கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பரபரப்பு வீடியோ வெளியான நிலையில் போலீசார் இந்நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முழு விவரம் பின்வருமாறு:- திருமணம் முடிந்தால் கோயில் குளம் என தம்பதியர் ஆன்மீக சுற்றுலா செல்வது வழக்கம், அந்த வகையில் தனது மனைவியுடன் ஆயோத்திக்கு வந்து ஒரு புதுமண தம்பதியை ஒரு வன்முறை கூட்டம் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ விவகாரம் தொடர்பாக போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்ததாகவும், இல்லை இல்லை இது 10 நாட்களுக்கு முன்பு நடந்தது என்றும் உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்: அண்ணன் எடப்பாடியார்னு அழுத்தி சொன்ன வளர்மதி.. ஓபிஎஸ்சை ஊறுகாவாகூட மதிக்கல.. தலைவன் இருக்கிறான் டயலாக் வேற..

Kissing and having Indecent while bathing in the river .. mob attack newlywed couple .. Police FIR.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தம்பதியர் புகார் கொடுக்கவில்லை என்றாலும் போலீசார் இந்த விஷயத்தை மிக தீவிரமாக எடுத்து தானாக முன் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நயா காட் காவல் நிலைய அதிகாரி டி.கே மிஸ்ரா அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஐபிசி பிரிவு 147 பொதுமக்களுக்கு தொல்லை  கொடுத்தல், 323 தானாக முன்வந்து தாக்கி காயப்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அயோத்தியா காவல் நிலைய ஆய்வாளர் தேவேந்திர பாண்டோ இதுகுறித்து கூறுகையில், குறிப்பாக அயோத்தி போன்ற புனிதமான இடங்களில் நதிகளில் நீராடும் போது கண்ணியம் காக்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்: இரவு 11மணிக்கு டெல்லியில் இருந்து வந்த போன் கால்.. ஓபிஎஸ் மாஸ் பின்னணி.. தெறிக்க விட்ட ஆஸ்பயர் சுவாமிநாதன்.

ஆனால் ஒரு இளைஞர் தனது மனைவிக்கு ந்தியில் நீராடியவாறு மிக நெருக்கமாக சேர்த்து அனைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதை பார்த்துக் கொண்டிருந்த அங்கிருந்த இளைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவர்களை தாக்கியுள்ளனர். அயோத்தி போன்ற மத வழிபாட்டுத் தலங்களில் திறந்தவெளியில் இது போன்ற செயல்களை அனுமதிக்க முடியாது என்று அவர்கள் அத் தம்பதியரை ஆற்றிலிருந்து வெளியே இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். பலர் அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்துள்ளனர். அவரது மனைவி எவ்வளவு தடுத்தும் அவரால் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வீடியோவில் காணமுடிகிறது.

இந்த வீடியோ பார்ப்பதற்கு பதட்டமாக உள்ளது. அதன் பின்னர் அத்தம்பதியினர் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை, ஒருவேளை அவர்கள் வெளியூரிலிருந்து அயோத்திக்கு வந்திருக்கலாம். அந்த சம்பவத்திற்கு பிறகு அவர்கள் இங்கிருந்து சென்றிருக்கக் கூடும் என யூகிக்கிறோம். அந்த ஜோடி யார், எங்கு இருக்கிறார்கள், என்பதை ஆராய்ந்து வருகிறோம். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் அயோத்தியில் காணவில்லை, இந்நிலையில் அந்த தம்பதியரை தாக்கியவர்கள் மீது வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios