அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வாட்ஸ்-அப்பில் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக வந்துள்ளது. அதில், இளைஞன் ஒருபவன் வயதானவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் வைரலாக பரவியது.

வாட்ஸ்-அப் காட்சியில், தந்தையை தாக்கிது மகன் என்று தெரிந்தது. மகனை, தாயாரும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களும் தடுக்க முயன்றும் அவர் சமரசத்தை ஏற்க மறுத்து தந்தையை மீண்டும், மீண்டும் காலால் எட்டி உதைத்து தாக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. பின்னர் தந்தை மகனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.இந்த வீடியோவை  பார்த்த அரசு அதிகாரிகள் இக்காட்சி பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வாட்ஸ்-அப் காட்சியில் காணப்படும் வாலிபரும், அவரது தந்தையும் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரித்ததில் அவர்கள் மாவேலிக்கரையை சேர்ந்த ரெவிஸ் அவரது தந்தை என்பதும் தெரிய வந்தது.

ரெவிசுக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அவரது தந்தையும், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். சம்பவத்தன்று ரெவிஸ் மது பாட்டில் வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்து உள்ளார். இதை ரெவிசின் தந்தை பார்த்துள்ளார். ரெவிஸ் வெளியேச் சென்றதும், அவரது தந்தை, மது பாட்டிலை எடுத்து அவரே குடித்துவிட்டார். திரும்பி வந்த மகன் காலி மதுபாட்டிலை பார்த்ததும், ஆத்திரம் அடைந்துள்ளார்.

மதுவை குடித்தது தந்தை என்று தெரிந்த பின்பும், ஆத்திரம் அடங்காமல் வீட்டிற்கு வெளியே நின்ற தந்தையை சரமாரியாக அடித்துயுள்ளனர். இதை அக்கம் பக்கத்தில் இருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து அதனை வாட்ஸ் ஆப்பில் பதிவேற்றியுள்ளனர். போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில் மாவேலிக்கரை போலீசார், ரெவிஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் சமூக வலைத்தளத்தில் அவர் தந்தையை தாக்கும் காட்சிகளை அகற்றவும், நடவடிக்கை எடுத்தனர்.