கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் கலாதரன்(39). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கேரளாவில் இருந்து வேலைக்காக திருப்பூர் வந்த இவர் அங்கிருக்கும் பூவலப்பட்டி என்கிற பகுதியில் தங்கி இருந்தார். திருப்பூரில் இருக்கும் ஒரு பனியன் கம்பெனியில் அவர் வேலை பார்த்து வந்த நிலையில் அவருடன் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

கலாதரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக இருவரிடையேயும் அடிக்கடி தகராறு ஏற்படவே கலாதரனிடம் கோபித்து கொண்டு குழந்தைகளை அழைத்து கொண்டு கேரளா சென்று விட்டார். கலாதரன் மட்டும் திருப்பூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். அவர் வசிக்கும் அதே பகுதியில் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 17 வயது சிறுமியின் வசித்து வந்திருக்கிறார். சிறுமியுடன் அடிக்கடி பேச்சுக்கொடுத்து கலாதரன் பழகி வந்துள்ளார். இந்தநிலையில் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் கலாதரனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை கடத்திச்சென்று அவர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவலர்கள் போக்சோவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உச்சகட்ட போதையில் தங்கையை சீரழித்த அண்ணன்..! தன்னை மறந்து உல்லாசம் அனுபவித்த கொடூரம்..!