வேலூரை சேர்ந்தவர் பாண்டி( பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயது சிறுவனான இவர் பெற்றோருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவரது தங்கை ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 16 வயது ஆகின்றது. பாண்டிக்கு இந்த வயதிலேயே குடிப்பழக்கம் இருக்கிறது. தினமும் குடிப்பதை அவர் வாடிக்கையாகவே வைத்துள்ளார். குடிப்பதை பெற்றோரும் உறவினர்களும் கண்டித்தும் அவர் கை விடாமல் இருந்துள்ளார்.

சம்பவத்தன்றும் நண்பர்களுடன் சேர்ந்து பாண்டி மது அருந்தியுள்ளார். அன்று அளவுக்கு அதிகமாக குடித்த அவர் உச்சகட்ட போதையுடன் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது வீட்டில் அவரது தங்கை மட்டும் தனியாக இருந்துள்ளார். பெற்றோர் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. அதிக போதையில் இருந்த பாண்டி, வீட்டில் இருப்பது தனது தங்கை என்பதை மறந்து அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.  போதை தெளிந்தவுடன் நடந்தவற்றை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாண்டி, யாரிடமாவது கூறினால் தற்கொலை செய்து விடுவதாக தங்கையை மிரட்டியுள்ளார்.

செய்வதறியாது திகைத்து அதிர்ச்சியடைந்த ரேகா, அதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லமுடியாமல் தவித்திருக்கிறார். இதனிடையே ரேகா தற்போது 8 மாத கர்ப்பமாக இருக்கிறார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்ததில் நடந்தவை தெரிய வந்துள்ளது. இந்த தகவல் அக்கம்பத்தினர் வழியாக காவல்துறைக்கு தெரிந்திருக்கிறது.. இதையடுத்து நடவடிக்கை எடுத்த காவலர்கள் போக்சோவின் கீழ் சிறுவனை கைது செய்து செங்கல்பட்டு சிறுவர் சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.

அதிரடி திட்டங்களுடன் அதிமுக பட்ஜெட்..! கதிகலங்கும் திமுக..!