கேரளாவில் ஒருதலைக்காததால் கல்லூரி மாணவியை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து இளைஞன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரள கும்பநாட் பகுதியைச் சேர்ந்தவர் அஜின் ரேஜி மேத்யூ(18). இவர் திருவல்லா பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணிடம் பலமுறை காதலிக்கும் படி அப்பெண்ணை வலியுறுத்தியுள்ளார். இதனை அந்தப் பெண் மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று கவிதா விஜயகுமார் என்ற பெண் கல்லூரிக்கு செல்ல பேருந்துக்கா காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞன் அஜின் அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். அப்போது வாக்குவாதம் பெரிதாக, திடீரென அந்த இளைஞன் தனது கையில் கொண்டு வந்திருந்த இரண்டு பாட்டில் பெட்ரோலை அந்த பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்துள்ளான். 

உடனே சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த பொதுமக்கள்  அப் பெண்ணை மீட்டு அருகிலுள்ள திருவல்லா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 80 சதவீத தீ காயத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பத்தில் தொடர்புடைய இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணை அவன் காதலித்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவதாக அந்த பெண்ணின் பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை ஆகையால் ஆத்திரமடைந்ததால் பெட்ரோல் ஏற்றி கொல்ல முயற்சித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அஜின் மேத்யூ மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் காதலிக்கவில்லை என்றால் கொலை செய்வதை இளைஞர் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.