கள்ளக்காதலியுடன் உல்லாச வாழ்க்கை.. இரட்டை கொலை வழக்கில் காட்டிக்கொடுத்த மங்கி குல்லா.. வெளியான பகீர் தகவல்.!
பவுலின்மேரி நடத்தி வரும் தையல் வகுப்பிற்கு சென்ற இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்த அமலசுமன் கேலி கிண்டல் செய்தேன். இதை பவுலின்மேரி தட்டிக்கேட்டார்.
கன்னியாகுமரி அருகே தாய், மகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் குழந்தை தூய யேசுதெருவைச் சேர்ந்தவர் ஆன்றோ சகாய ராஜ். இவரது மனைவி பவுலின் மேரி(48). ஆன்றோ சகாயராஜூம், அவரது மூத்த மகனும் வெளிநாட்டில் வேலைசெய்து வருகின்றனர். இளைய மகன் சென்னையில் கல்லூரி படித்து வருகின்றார். பவுலின்மேரி தையல் பயிற்சி நடத்தி வரும் நிலையில் அவருக்கு துணையாக அவரது தாயார் தெரசம்மாள் வசித்து வந்தார்.
இதையும் படிங்க;- உன் தங்கச்சி எப்படி குளிக்கிறா பாரு.. பெண்ணின் அண்ணனுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞன்.
கடந்த 6-ம் தேதி தெரசம்மாளும், பவுலின் மேரி ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகையைக் கொள்ளையடிப்பதற்காக இந்த இரட்டை கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், கொலை தொடர்பாக எந்த துப்பும் கிடைக்கவில்லை. கொலையாளியின் கை ரேகை மற்றும் மங்கி குல்லாவை தடையமாக வைத்து கடியப்பட்டிணம் மீனவ கிராமத்தை சேர்ந்த அமலசுமன்(36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் படு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்:- எனக்கு திருமணம் ஆகி விட்டது. என்னை விட்டு மனைவி பிரிந்து சென்று விட்டார். நான் தற்போது சூரப்பள்ளம் பகுதியில் வசித்து வருகிறேன். அவ்வப்போது கடியப்படடணத்திற்கு செல்வது வழக்கம். பவுலின்மேரி தெரு வழியாக நான் செல்வேன். சம்பவத்தன்று பவுலின்மேரி நடத்தி வரும் தையல் வகுப்பிற்கு சென்ற இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்த அமலசுமன் கேலி கிண்டல் செய்தேன். இதை பவுலின்மேரி தட்டிக்கேட்டார்.
இதை பவுலின் தட்டிக்கேட்டதால் அவரைத் தீர்த்துகட்ட முடிவுசெய்தேன். அதன்படி குடிபோதையில் வந்து முதலில் அவரது வீட்டில் முதலில் மின்சாரத்தை துண்டித்தேன். ஆனாலும் இன்வெர்டர் இருந்ததால் விளக்கு எரிந்தது. வீட்டில் கதவைத் தட்டினேன். பவுலின்மேரி திறந்ததும் அவரைச் சுத்தியலால் அடித்துக் கொன்றேன். தொடர்ந்து வந்த அவரது அம்மா தெரசம்மாளையும் சுத்தியலால் அடித்து கொலை கொன்றேன். அவர் கழுத்தில் இருந்த தாலி சங்கலியை அடகு கடையில் வைத்து கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நான் பயன்படுத்திய மங்கி குல்லாவை வைத்து துப்பு துலக்கினார்கள். நான் சிக்கி கொள்வேன் என நினைத்து தலைமறைவானேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர் என்றார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அமலசுமனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- பாவாடையுடன் குளித்து கொண்டிருந்த 57 வயது பெண்ணை கரைக்கு தூக்கி சென்று இளைஞர் செய்த காரியம்..!