தன்னுடன் வாழ வேண்டுமானால் தனது ஒரினச்சேர்க்கை நண்பருக்கும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறிய அமெரிக்க மாப்பிள்ளையால் ஆந்திராவில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 30 வயதான பாஸ்கர். இவர் அமெரிக்கக்குடியுரிமை பெற்று அங்கு பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் செய்ய குண்டூரை சேர்ந்த 25 வயது பெண்ணை பேசி முடித்து நிச்சயம் செய்தனர் பெற்றோர். அதன்படி அமெரிக்க மாப்பிள்ளை பாஸ்கருக்கும், குண்டூர் பெண்ணுக்கும், கடந்த மார்ச் மாதம் 18 ம்தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்க எளிய முறையில் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது 50 லட்சம் ரூபாய் ரொக்க பணம்,  70 சவரன் நகைகளை பெண் வீட்டார் வழங்கியுள்ளனர். மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அன்றே அந்த பெண்ணுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. முதலிரவில் அமெரிக்க மாப்பிள்ளை தனக்கு உடல் நிலை சரியில்லை சமாளித்து படுத்துறங்கி உள்ளார். அன்று மட்டுமல்ல திருமணம் முடிந்த நாளில் இருந்தே கட்டிய மனைவியை கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளார் பாஸ்கர்.

இதனால் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்த அந்தப்பெண், மாப்பிள்ளையின் கண்டுகொள்ளாமையை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பாஸ்கரை அழைத்து பேசியவர்களிடம் சரியான பதில் கூறாமல் அவர் தட்டி கழித்துள்ளார். இறுதியில், தான் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன், கடந்த 4 வருடமாக நல்ல புரிதலுடன் குடும்பம் நடத்தி வருவதாகவும், ஓரினச்சேர்க்கையால் பெண்கள் மீதான மோகம் குறைந்து விட்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளார். இந்த தகவலை அறிந்த புதுப்பெண் விரக்தியில் தனது தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.

 

மனைவியை அழைத்து சமாதான பேச்சுவர்த்தையில் ஈடுபட்ட அமெரிக்க மாப்பிள்ளை, தனது மனைவியை தனியாக அழைத்துச் சென்று சமாதானப்படுத்துவது போல விபரீத நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். ’தன்னுடன் தொடர்ந்து வாழ விரும்பினால், அமெரிக்கா அழைத்து செல்வதாகவும், அங்கு வந்து தன்னுடன் ஏற்கனவே குடும்பம் நடத்திவரும் ஆண் நண்பருக்கும் மனைவியாக இருக்க வேண்டும் என்று கூறி கூடுதலாக அதிர்ச்சியூட்டி உள்ளார்.

கணவனின் விபரீத திட்டத்தை அறிந்து அதிர்ந்து போன பெண்ணின் பெற்றோர் அமெரிக்க மாப்பிள்ளை பாஸ்கர் மீது குண்டூர் புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.