திருச்சி மாவட்டம் புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காவியா என்கிற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு தற்போது 7 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்தநிலையில் திருமணத்திற்கு பிறகு ரமேஷிற்கும் ரீனா என்கிற இளம்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர்களது உறவு திருமணத்திற்கு மீறிய பந்தமாக இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக காவ்யாவிற்கு தெரிய வந்து இருவரிடையேயும் அடிக்கடி தகராறு நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் திருச்சியில் இருக்கும் காவேரி கரைக்கு அப்பெண்ணுடன் ரமேஷ் சென்றுள்ளார். அங்கு இருவரும் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளனர். தங்களுடன் விஷ பாட்டில் ஒன்றையும் கொண்டு சென்ற அவர்கள், திடீரென அதை அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

காவிரி கரையில் ஆணும் பெண்ணும் தற்கொலை செய்து கொண்ட தகவல் காவல்துறைக்கு தெரிய வந்தது. விரைந்த காவலர்கள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்ததில் இருவரும் கள்ளகாதலர்கள் என்பது தெரிய வந்தது. எனினும் அவர்கள் எதற்காக தற்கொலை செய்தார்கள் என்கிற விபரம் இன்னும் தெரியவில்லை. அதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்... நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..!