கல்யாணமான புதுப் பெண் தனது காதல் கணவனிடம் பழைய காதல் மற்றும் காதலன் பற்றி சொன்னதால் கோபமான கணவன் கல்யாண ரிசப்ஷன் செலவு 1 லட்சத்தை வீட்டிலிருந்து வாங்கி வருமாறு என்னை அடித்து துன்புறுத்தி வருகிறார்.

கோவை இடையர்பாளையம் அன்புநகரை சேர்ந்தவர் சார்லஸ். இவர் சௌமியா என்ற பெண்ணை காதலித்தார். சௌமியா  ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு என்பதால், வீட்டை விட்டு ஓடிப்போய், சார்லஸை கல்யாணம் செய்து கொண்டார். சார்லசின் பெற்றோர் தான் இருவருக்கும் கடந்த மே மாசம் கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது காதல் வாழ்க்கையில், யார் கண்ணு பட்டுச்சோ திடீரென போலீஸ் துடியலூர் அனைத்து மகளிர் போலீசுக்கு சௌமியா ஒரு மனுவுடன் வந்திருந்தார். அதில் அவர் சொல்லி உள்ள சுருக்கம் தான் இது: தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். நானும், சார்லசும் கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் சந்தோ‌ஷமாக இருந்தோம். அப்போ என்னுடைய கடந்த கால வாழ்க்கை குறித்து சார்லஸ் கேட்கவும், நானும் எதார்த்தமாக சிறுவயதில் ஒருவரை காதலித்து தோல்வி அடைந்தது பற்றி சொன்னேன். இதை சாதாரணமாக எடுத்து கொள்வார் என்று தான் சொன்னேன் ஆனால் அவர், சந்தேகப்பட்டு என்னை பெல்ட்டால் அடித்து விட்டார்.

மேலும், கல்யாண ரிசப்ஷன் செலவு 1 லட்சத்தை வீட்டிலிருந்து வாங்கி வருமாறு என்னை அடித்து துன்புறுத்தி வருகிறார். அதனால் சம்பவத்தன்று நான் போட்டிருந்த நைட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினேன். அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒருத்தரோட போன் வாங்கி என் பெற்றோரிடம் சொல்லி அழவும், அவர்கள் என்னை வீட்டுக்கு வருமாறு சொன்னார்கள். இப்போது அவர்களுடன்தான் வசித்து வருகிறேன். 

என்னை தாக்கி பணம் கேட்ட என் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் இந்த புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.