Asianet News TamilAsianet News Tamil

இரவு, பகலாக மது போதையில் லயித்த கணவன்.. கள்ளக் காதலனை வீட்டுக்கே கூட்டிவந்து அடிக்கடி உல்லாசத்தில் மனைவி..

சிவ லீலா கணவன் வீட்டிற்கு வந்தும் ஜஹாங்கீர் அவளை பின்தொடர்ந்தார், சிவக்குமார் வீட்டில் இருக்கும்போது ஜஹாங்கீர் வீட்டுக்கு வர ஆரம்பித்தார், சிவசங்கர் மதுபோதையில் இருக்கும்போதெல்லாம் ஜஹாங்கீர் சிவாலீலாவுடன் உல்லாசம் அனுபவிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது.

Husband intoxicated with alcohol .. illegal lover gathers at home and wife often flirts ..
Author
Chennai, First Published Nov 1, 2021, 7:04 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மதுவுக்கு அடிமையாகவும், கள்ளக்காதலுக்கு தடையாகவும் இருந்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் கள்ளக்காதலுடன் சேர்த்து மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்.. அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வது பழமொழி, ஆனால் கணவன்- மனைவி தகாத உறவு காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று சொர்க்கத்துக்கே அனுப்பி வைக்கும் அளவிற்கு இன்று இல்லற வாழ்க்கை மாறிவிட்டது என்பதான் வேதனை. தம் வருங்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தி வாழ வைக்க வேண்டிய தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை இட்டுக் குழந்தைகளின் எதிர்காலத்தையே இருளில் தள்ளும் சம்பவங்களும் ஒருபுறம் அரங்கேறி வருகிறது.

Husband intoxicated with alcohol .. illegal lover gathers at home and wife often flirts ..

இதையும் படியுங்கள்: எதிர் கட்சியா இருந்த போது என்னென்ன பேசுனீங்க.. திமுகவின் இரட்டை வேடம்.. ஸ்டாலினை பிரிச்சு மேய்ந்த ஓபிஎஸ்.

இந்த வரிசையில் ஒரு பெண் தனது கணவன் குடிகாரனாக மரியதால், மற்றொரு ஆணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவு வைத்துக் கொண்டு பின்னர் தன் கணவனையே கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பின்னர் போலீஸ் விசாரணையில் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:- தெலுங்கானா  மாநிலம்  விகாராபாத்  மாவட்டம், நவாப் பேட்டை மண்டலம், எல்லன் கொண்டா கிராமத்தை சேர்ந்தவர் சின்ன மல்கு சிவசங்கர் (30) இவருக்கும் வெல் துர்கா கிராமத்தைச் சேர்ந்த சிவலீலா என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். திருமணம் நடந்து  இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாகவே கழிந்தது. ஒரு கட்டத்தில் சிவசங்கர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக வைத்திருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் வேலைக்கு கூட செல்லாமல் இருபத்தி நான்கு மணி நேரமும் குடித்துவிட்டு மதுபோதையில் லயித்து வந்தார் சிவசங்கர். இதனால் கணவன் சிவசங்கர் மீது சிவலீலாவுக்கு சலிப்பு ஏற்பட்டது.

அதேபோல் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்து வந்தது, ஒருகட்டத்தில் சிவசங்கரின் கொடுமை தாங்க முடியாமல் சிவலீலா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். கிட்டத்தட்ட தாய் வீட்டில் எட்டு மாதங்கள் தங்கியிருந்த அவர் மீண்டும் கணவன் வீட்டுக்கு வந்தார், தாய் வீட்டில் இருந்தபோது ஜஹாங்கீர் என்ற இளைஞனுடன் சிவலீலாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது நாளடைவில் காதலாக மாறி இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சிவ லீலா கணவன் வீட்டிற்கு வந்தும் ஜஹாங்கீர் அவளை பின்தொடர்ந்தார், சிவக்குமார் வீட்டில் இருக்கும்போது ஜஹாங்கீர் வீட்டுக்கு வர ஆரம்பித்தார், சிவசங்கர் மதுபோதையில் இருக்கும்போதெல்லாம் ஜஹாங்கீர் சிவாலீலாவுடன் உல்லாசம் அனுபவிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் இவர்களின் தவறான உறவு சிவசங்கரியின் கவனத்துக்கு வந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

Husband intoxicated with alcohol .. illegal lover gathers at home and wife often flirts ..

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் தலைமையில் திடீர் ஆலோசனை... அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு.. 5 மாவட்டங்களில் முக்கிய முடிவு.

எனவே தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவன் சிவசங்கரை கொல்ல இருவரும் திட்டமிட்டார். சிவலீலா இதுபற்றி ஜஹாங்கீரிடம் ஆலோசித்தார். பின்னர் இருவரும் கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். எனவே இந்த மாதம் 26ஆம் தேதி சிவசங்கரை தனது ஸ்கூட்டியில் ஏற்றிக்கொண்டு ஜஹாங்கீர் மது கடைக்கு சென்றார், அதிக மது அருந்தியதால் சிவசங்கர் உச்சகட்ட போதைக்கு ஆளானார். அப்போது சிவசங்கரை ஆளரவம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற ஜஹாங்கீர், அவரின்  தலையில் கல்லால் தாக்கினார், அதில் சிவசங்கர் சுயநினைவு இழந்து  ரத்த வெள்ளத்தில் சரிந்தார், பின்னர் சிவலீலாவிடம் கணவனை தாக்கிய விவகாரம் குறித்து கூறிவிட்டு கள்ளக்காதலன் தலைமறைவானார். இதனை அடுத்து சிவசங்ரை சிவலீலா வீட்டுக்கு அழைத்து வந்தார், சிவசங்கரின் நிலைமையே பார்த்த கிராம மக்கள் சிவசங்கரை சங்கரெட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே சிவசங்கர் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மனைவி சிவலீலாவின் தொலைபேசியை போலீசார் ஆராய்ந்தனர், அப்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை சிவலீலா அடித்து கொன்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்கம் போல அவர்களது பாணியில் சிவ லீலாவை விசாரித்தனர், அப்போது குற்றத்தை ஒப்புக்கொண்டார் மனைவி சிவலீலா. பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது எப்படி என்பது குறித்தும் அவர் விளக்கினார். இந்நிலையில் போலீசார் சிவலீலா, கள்ளக்காதலன் ஜஹாங்கீரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை  கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios