Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் தலைமையில் திடீர் ஆலோசனை... அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு.. 5 மாவட்டங்களில் முக்கிய முடிவு.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திமுக தலைமையிலான அரசை கண்டித்து அதிமுக சார்பில் 5 மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும் என மதுரை ஒ.பன்னீர்செல்வம்  தெரிவித்துள்ளார். 

Sudden meeting led by OPS ... Extreme agitation in AIADMK .. Important decision in 5 districts.
Author
Chennai, First Published Nov 1, 2021, 5:45 PM IST

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திமுக தலைமையிலான அரசை கண்டித்து அதிமுக சார்பில் 5 மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும் என மதுரை'யில் ஒ.பன்னீர்செல்வம்  தெரிவித்துள்ளார். 

மதுரையில்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தலைமையில் முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து ஐந்து மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு  ஆர்.பி உதயகுமார், மற்றும் வி. வி ராஜன் செல்லப்பா, சையதுகான், பி.ஆர் செந்தில்நாதன், எம்.ஏ. முனியசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம்  கூறியதாவது, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மிகப்பெரிய சட்டப்போராட்டம் நடத்தி 136 அடியிலிருந்து முதல்கட்டமாக 142 அடியாகவும் பேபி அணை பழுது நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அதன் முழு கொள்ளளவு 152 அடி அளவுக்கு முல்லைப்பெரியாறில் நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற ஒரு வரலாற்று தீர்ப்பினை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெற்றுத் தந்தார்கள். 

இதையும் படியுங்கள்: 40 வருஷ அரசியலில் விழுந்த இடி.. துடி துடிக்கும் ராமதாஸ்.. விட மாட்டோம் என கதறிய பாமக பாலு..

Sudden meeting led by OPS ... Extreme agitation in AIADMK .. Important decision in 5 districts.

அதன் தொடர்ச்சியாக அந்த வருடமே 142 அடியாக முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை நிலைநிறுத்தப்பட்டது அதைத்தொடர்ந்து மூன்று தடவை முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை நிலைநிறுத்தப்பட்ட வரலாறு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஏற்படுத்தப்பட்டது.  அதற்காக முல்லை பெரியார் அணை ஜீவாதார உரிமையாக ஐந்து மாவட்டங்கள் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மிகப் பெரிய ஆதாரமாக விளங்கி கொண்டிருப்பது முல்லைபெரியார் ஆகும். அதேபோல் முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னி குக் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அம்மா அவர்கள் நினைவு மண்டபம் முழு உருவ வெண்கல சிலையை தமிழக-கேரள பார்டரில் அமைத்து தந்தார்கள். இந்த ஐந்து மாவட்ட விவசாய பெருமக்களும் மதுரையில் அம்மாவிற்கு மிகப் பெரிய கூட்டத்தை ஏற்பாடு  செய்து நன்றி அறிவிப்பு கூட்டமாக நடத்தினார்கள்.

Sudden meeting led by OPS ... Extreme agitation in AIADMK .. Important decision in 5 districts.

இதையும் படியுங்கள்: Breaking:வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து.. நீதி மன்றம் அதிரடி. பாமக அதிர்ச்சி.

ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி உள்ளது இன்றைக்கு பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்ற கழகம் அதனுடைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அமைத்திருக்கின்ற இன்றைக்கு தமிழக அரசு 142 அடியை தேக்குவதற்கு இன்றைக்கு பல்வேறு இடையூறுகள் கேரளா அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அதில் கண்டும் காணாமல் உள்ள தமிழக அரசின் நிலையை தமிழக மக்களுக்கு நினைவுபடுத்துவதற்கும், இந்த ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமை உறுதிப்படுத்துவதற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்  ஐந்து மாவட்டங்களில் நடத்துவதற்கு என்று இங்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. நம்முடைய கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவருடன் நானும் கலந்து பேசி அதற்குரிய தேதியை இன்று மாலை அறிவிப்போம், போராட்டம் ஆர்ப்பாட்டம் மக்கள் எழுச்சியுடன் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக அமையும் நம்முடைய ஜீவாதார உரிமைகளை காக்கின்ற ஒரே இயக்கம் ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Sudden meeting led by OPS ... Extreme agitation in AIADMK .. Important decision in 5 districts.

இந்த கூட்டம் துவங்கியபோது, இந்த கூட்டம் மிக ரகசியமாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது, இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் செல்போன்களை அனைத்து வைத்து கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது, எனவே ஓபிஎஸ் தலைமையில் ரகசிய கூட்டம் என தகவல் பரவியது. அது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் உண்மைக்கு மாறாக பரவுவதை உணர்ந்து கொண்ட ஓபிஎஸ், இது குறித்து  வெளிப்படையாக  செய்தியாளர்களை சந்தித்த பின்னரே இது தொடர்பான பரபரப்பு அடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.  

 
 

Follow Us:
Download App:
  • android
  • ios