மதுரையில் வாகன சோதனையில் இருந்த போலீசார்  இளைஞர் மீது நடத்திய இரக்கமற்ற செயலால் தற்போது அந்த குடும்பமே சீரழிந்துள்ளது.  

மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த விவேகானந்தகுமார், அவரது மனைவி கஜப்பிரியா இவர்களுக்கு சாய்சரன் என்ற ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.  மதுரை சிம்மக்கல் அருகே கடந்த சனிக்கிழமை இரவு கீழ் பாலம் பகுதியில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தகுமார் மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரும் வாகனத்தில் சென்றபோது சோதனைக்காக நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் டென்ஷானான காவலர்கள் ஓடிவந்து பின் புறமாக லத்தியால் தாக்கியதில் பின்னால் அமர்ந்து சென்ற விவேகானந்தகுமார் தலையில் பயங்கர காயம் அடைந்தார். 

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விவேகானந்த குமார்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்றைய தினம் சம்பவம் தொடர்பாக கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும் உறவினர்களின் தொடர் பேராட்டம் நடத்தியதில்,தாக்குதல் சம்பவம் நடந்த சமயத்தில் பணியில் இருந்த 6 காவலர்களின் பெயரை மாவட்ட ஆட்சியர் சாந்தகுமார் அறிவித்த நிலையில் இரவு உடற்கூராய்வு நடைபெற்றது.  

இதனையடுத்து இளைஞர் உயிரிழப்புக்கு காரணமான போலிசார் மீது கொலை வழக்கு பதிவு செஞ்சா மட்டுமே உடலை வாங்கபோவதாக உறவினர்கள் கூறினர். 

இந்நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்த விவேகானந்தகுமாரின் மனைவி கஜப்பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயன்றார். உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

போலிசார் தாக்குதலில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் இருந்து மீள முடியாத நிலையில் தற்போது விவேகானந்தகுமாரின் மனைவியும் தற்கொலை முயற்சி செய்து கொண்ட நிகழ்வு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை மறைந்த கணவன் விவேகானந்தகுமார் உடல் வாங்கப்படாத நிலையில் மனையும் தக்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.