ஓடும் ரயிலில் எச்ஐவி பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கதற கதற கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து கொண்டே வருகிறது. பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் அதிகமாக வந்துகொண்டே தான் இருக்கிறது. கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தும் குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், மகாத்மா காந்தி, சாலையில் ஒரு பெண் இரவில் தனியாக நடந்து செல்லும் நாள்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளாக கருதுவேன் என்று கூறினார். காந்தியின் கருத்தின்படி இந்தியாவில் தற்போது பெண்கள் சுதந்திரத்தை இல்லாமல் தவித்து வருகின்றனர். 

பீகார் மாநிலம் கைமுர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்த இவர் நள்ளிரவு ஊர் திரும்புவதற்காக பபுவா ரோடு ரயில் நிலையம் சென்றார்.

இதையும் படிங்க;- பாஜகவில் இருந்து எந்த நேரத்திலும் விலகுவோம்... அமைச்சரின் பேச்சால் எடப்பாடி அப்செட்..!

அங்கு பாட்னாவில் இருந்து பபுவா செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஒரு பெட்டியில் அமர்ந்தார். அந்த பெட்டியில் வேறு யாரும் இல்லை. இளம்பெண் தனியாக இருப்பதை பார்த்த இரண்டு இளைஞர்கள் ரயிலுக்குள் ஏறி அவரை கொடூரமாக முறையில் கற்பழித்தனர். அப்போது, அவர்கள் போலீசாரை கண்டதும் ஓட முயற்சி செய்த போது விரட்டி சென்று பிடித்தனர்.

இதையும் படிங்க;- ரத்த வெள்ளத்தில் நிர்வாண கோலம்... தனியாக இருந்த இளம்பெண்ணை வெறி தீர பலாத்காரம் செய்து கொடூர கொலை..!

இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ரயில் வைத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர். அவரை கைது செய்த போலீசார், பலாத்காரத்தில் ஈடுபட்ட மற்றொரு இளைஞரையும் கைது செய்தனர். விசாரணையில் கைமுர் மாவட்டதைச் சேர்ந்த பிரேந்திர பிரகாஷ்சிங்(26), தீபக் சிங் (28) என்பது தெரியவந்தது.