காதலனை இரவில் வீட்டிற்கு வரழைத்த காதலி! சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் உயிரை விட்ட காதலி! நடந்தது என்ன?
திருச்சி மாவட்டம் வாத்தலை பகுதி கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் மாலையாளி. இவரது மகள் சங்கவி(20). 12ம் வகுப்பு முடித்து விட்டு மேல் படிப்பு படிக்காமல் தந்தைக்கு உதவியாக கோரைப்பாய் பின்னும் வேலையை செய்து வந்தார்.
காதலியை பார்க்க வந்த காதலன் ஊர் மக்களிடம் சிக்கியதால் அந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் வாத்தலை பகுதி கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் மாலையாளி. இவரது மகள் சங்கவி(20). 12ம் வகுப்பு முடித்து விட்டு மேல் படிப்பு படிக்காமல் தந்தைக்கு உதவியாக கோரைப்பாய் பின்னும் வேலையை செய்து வந்தார். இவர் தொட்டியம் பகுதியை சேர்ந்த ஆமூர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு காதலியை பார்ப்பதற்காக ஆமூர் சங்கலி வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, அந்த இளைஞர் காதலி வீட்டிற்கு சென்றபோது கிராம மக்கள் திருடன் என நினைத்து அவரை சுற்றி வளைத்து அடித்து உதைத்துள்ளனர். இதனையடுத்து, வேறுவழியில்லாமல் சங்கவி அவரை காதலிக்கிறேன் என்னை பார்ப்பதற்காக தான் வந்தார் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- பைக்கில் லிப்ட் கேட்ட சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர்.. தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை அனுப்பி வைத்தனர். காதல் விஷயம் ஊர் மக்களுக்கு தெரிந்ததால் அவமானம் தாங்க முடியாத சங்கவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாகியும் மகள் அறையில் இருந்து வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் சங்கவிக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்தனர்.
ஆனால், எப்படியோ விஷயம் தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சங்கவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- மாரடைப்பால் உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர்! அலறிய பயணிகள்! 62 பேர் உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்.!