கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஓயாத டார்ச்சர்.. கட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று காதலியை கதறவிட்ட காதலன்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் பகுதியில் பெத்தாம்பாளையம் சாலையில் உடலில் பலத்த  தீக்காயங்களுடன் இளம்பெண் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அந்த பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Girlfriend who forced him to marry was killed in Tiruppur

திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை, காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் பகுதியில் பெத்தாம்பாளையம் சாலையில் உடலில் பலத்த  தீக்காயங்களுடன் இளம்பெண் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அந்த பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு இடையூறு.. தாலி கட்டிய கணவரை போட்டு தள்ளிய கொடூரம்.. போலீசில் மனைவி சொன்ன பகீர் வாக்குமூலம்.!

Girlfriend who forced him to marry was killed in Tiruppur

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தீ வைக்கப்பட்ட  பெண் பூஜா (19) என்பதும் அவர் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்த போது லோகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லோகேஷை பூஜா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், அந்த பெண்ணை நைசாக காட்டுப்பகுதிக்கு அழைத்து காதலன் லோகஷே் பூஜாவை  தலையில் தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்த நிலையில் பூஜா அலறியபடி சாலைக்கு ஓடி வந்துள்ளாா். இதனை கண்ட லோகேஷ் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றபோது தவறி விழுந்து காயமடைந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

Girlfriend who forced him to marry was killed in Tiruppur

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது காதலன் லோகேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் காதலன் காதலியை எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  என்ன லவ் பண்ணிட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணுவியா.. உல்லாசத்துக்கு மறுத்த காதலி.. கதறவிட்ட காதலன்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios