என்ன லவ் பண்ணிட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணுவியா.. உல்லாசத்துக்கு மறுத்த காதலி.. கதறவிட்ட காதலன்..!
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அடுத்த ஹண்டியா பகுதியை சேர்ந்தவர் நீரஜ். அதே பகுதியை சேர்ந்த குஷ்பு என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி இருவரும் வெளியில் சுற்றி திரிந்து வந்துள்ளனர்.
வேறொருவருடன் நிச்சயிக்கப்பட்ட நிலையில் உல்லாசத்துக்கு வர மறுத்ததால் காதலியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடி காததலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அடுத்த ஹண்டியா பகுதியை சேர்ந்தவர் நீரஜ். அதே பகுதியை சேர்ந்த குஷ்பு என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி இருவரும் வெளியில் சுற்றி திரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், காதலி குஷ்புவின் வீட்டில் அவரது பெற்றோர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க;- கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. சினிமா பாணியில் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கணவனை தூக்கிய எஸ்.ஐ. மனைவி..!
வழக்கம்போல கடந்த சில வாரங்களுக்கு முன் இருவரும் வீட்டில் தனியாக உல்லாசமாக இருப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதை குஷ்புவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதனையடுத்து, வேறு ஒருவருடன் குஷ்புவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால், காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி வீட்டில் தனியாக குஷ்பு இருப்பதை அறிந்த நீரஜ் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, தன்னுடன் உல்லாசமாக இருக்கும் படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு குஷ்பு மறுப்பு தெதரிவிக்கவே ஆத்திரமடைந்த நீரஜ் அவரது வீட்டில் இருந்த கத்தியால் குஷ்புவின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்தத அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, நீரஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குஷ்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நீரஜை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க;- என் புருஷன் உயிரோடு இருக்கும் வரைக்கும் நம்ம ஒன்னு சேர முடியாது.. கணவரை கூலிப்படையை ஏவி போட்டு தள்ளிய மனைவி.!