கல்யாண ஆசைகாட்டி நர்சிங் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மற்றும் அவரது அம்மாவையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் எல்லப்பன் மகள் மதுரை தல்லாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் நர்சிங் படித்து வருகிறார். இவர் புதூர் மூன்று மாவடியில் உள்ள மருத்துவமனைக்கு பயிற்சிக்கு சென்றபோது அங்கு சிகிச்சை பெற்ற உத்தப்புரத்தைச் சேர்ந்த ராமர் மகன் ராஜேஸ்வரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 11ந்தேதி ராஜேஸ்வரன் அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 2 பேருக்கும் கல்யாணம் நடத்தி வைக்க ஏற்பாடு நடந்தது.

இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் உத்தப்புரத்தில் உள்ள ராஜேஸ்வரன் வீட்டுக்கு சென்று தனது மகளை தங்களுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனிடையே நேற்று ராஜேஸ்வரன் அந்த மாணவியை கல்யாணம் செய்துகொள்வதாக ஏமாற்றி ஆசை வார்த்தை கூறி தன வீட்டிலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக மாணவியின் பெற்றோர் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்க்கு அவரது அம்மாவும் உடந்தையாக இருந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் மீனா உத்தப்புரத்தில் உள்ள ராஜேஸ்வரன் மற்றும் அவரது தாயார் ஈஸ்வரி ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தார். மேலும் மைனர் பெண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக ராமர் மற்றும் அழகம்மாள் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.